2019 உலகக் கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம் அட்டவணை!!

உலக கோப்பையில் பங்கேற்பதற்கு முன்பாக மே 24 முதல் மே 28 வரை ஒவ்வொரு அணியும் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : May 21, 2019, 01:41 PM IST
2019 உலகக் கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம் அட்டவணை!! title=

டெல்லி: 2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வரும் மே 30 ஆம் தேதி துவங்கி ஜூன் 14 வரை என மொத்தம் 48 போட்டிகள் நடக்கவுள்ளது. அதில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என 12 நகரங்களில் நடக்கிறது. 

இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கிறது. அதில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகள் நேரடியாக தொடரில் பங்கேற்றன. மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி சுற்று மூலம் தொடரில் நுழைந்தது.

ஏற்கனவே உலக கோப்பை தொடரில் விளையாடும் அணிகளை அந்தந்த நாடுகள் அறிவித்துள்ளது. உலக கோப்பையில் பங்கேற்பதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. ஒவ்வொரு நாளும் 2 பயிற்ச்சி ஆட்டம் நடைபெற உள்ளது. மே 24 முதல் மே 28 வரை பயிற்ச்சி ஆட்டம் நடைபெறும். அதற்க்கான முழு அட்டவணை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

பயிற்சி ஆட்டம் விவரம்:-

மே 24: 
முதல் பயிற்சி ஆட்டம்: பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான்
2_வது பயிற்சி ஆட்டம்: இலங்கை vs தென் ஆப்ரிக்கா

மே 25: 
3_வது பயிற்சி ஆட்டம்: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா
4_வது பயிற்சி ஆட்டம்: இந்தியா vs நியூசிலாந்து

மே 26: 
5_வது பயிற்சி ஆட்டம்: பாகிஸ்தான் vs வங்கதேசம்
6_வது பயிற்சி ஆட்டம்: தென் ஆப்ரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ்

மே 27: 
7_வது பயிற்சி ஆட்டம்: இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான்
8_வது பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியா vs இலங்கை

மே 28: 
9_வது பயிற்சி ஆட்டம்: இந்தியா vs வங்கதேசம்
10_வது பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ்

Trending News