பயிற்சியாளராக மாறிய யுவராஜ் சிங் - IPL 2020 தொடரில் பங்கேற்கும் 4 வீரர்களுக்கு பயிற்சி அளித்தார்

ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் பஞ்சாப் வீரர்களுக்கு வழிகாட்டியாகவும் பயிற்சியாளராகவும் யுவராஜ் இருந்து வருகிறார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 5, 2020, 02:48 PM IST
  • ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் பஞ்சாப் வீரர்களுக்கு பயிற்சியாளராக யுவராஜ் சிங்
  • சுப்மான் கில், பிரபாசிம்ரன் சிங், அபிஷேக் சர்மா, அன்மோல்பிரீத் சிங் ஆகியோருக்கு பயிற்சி அளித்தார்.
  • ஐபிஎல்லின் 13 வது சீசன் செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.
பயிற்சியாளராக மாறிய யுவராஜ் சிங் - IPL 2020 தொடரில் பங்கேற்கும் 4 வீரர்களுக்கு பயிற்சி அளித்தார் title=

Cricket News: இந்தியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் (Yuvraj Singh) கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கலாம், ஆனால் அவரின் விளையாட்டின் மீதான அன்பு அப்படியே உள்ளது. ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் பஞ்சாப் வீரர்களுக்கு வழிகாட்டியாகவும் பயிற்சியாளராகவும் யுவராஜ் இருந்து வருகிறார். 

ஊரடங்கு (Lockdown) காலத்தில் இதைச் செய்தார். யுவராஜ் வீட்டில் சுப்மான் கில், பிரபாசிம்ரன் சிங், அபிஷேக் சர்மா, அன்மோல்பிரீத் சிங் ஆகியோருக்கு பயிற்சி அளித்தார். இது மட்டுமல்லாமல், அனைவருக்கும் வீட்டிலுள்ள உணவையே பரிமாறினார் யுவி. ஐபிஎல்லின் 13 வது சீசன் செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.

கொரோனா வைரஸ் (Coronavirus) காரணமாக, அனைத்து வகையான கிரிக்கெட் தொடர்கள் நிறுத்தப்பட்டன. ஐ.பி.எல். இல் உள்ள பல வீரர்கள் பங்கேற்க செல்ல சிரமப்படலாம். ஆனால், சுப்மான் கில், அபிஷேக் சர்மா, பிரபாசிமரன் சிங் மற்றும் அன்மோல்பிரீத் சிங் ஆகியோருடன் இது நடக்காது. எல்லோரும் யுவராஜிடமிருந்து பயிற்சி எடுத்துள்ளனர். 

ALSO READ |  யுவராஜ் சிங் - டோனியின் நெகிழ வைக்கும் வீடியோ!!

அபிஷேக் (Abhishek Sharma), பிரபாசிம்ரன் (Prabhsimran Singh) மற்றும் அன்மோல் (Anmolpreet Singh) ஆகியோர் யுவராஜ் சிங்கின் வீட்டில் இரண்டு மாதங்கள் தங்கினர். சுப்மான் கில் (Shubman Gill) மட்டுமே தனது வீட்டிலிருந்து தினமும் யுவி வீட்டுக்கு செல்வது வழக்கம். இந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின்படி, வீரர்களுக்கு யுவராஜின் வீட்டில் உணவு வழங்கப்பட்டது. அவர்கள் அனைவரும் யுவராஜ் தனிநபர் ஜிம்மில் பயிற்சி பெற்றனர். இது தவிர, மொஹாலியில் அமைந்துள்ள பி.சி.ஏ ஸ்டேடியத்தின் முகாமில் பங்கேற்றார்.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Thugs of punjab are getting ready for the season @shubmangill @abhisheksharma_4 @sagardiwanfw

A post shared by Yuvraj Singh (@yuvisofficial) on

யுவராஜ் பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் சார்பாக கிரிக்கெட் வீரர்களுடன் பணியாற்றினார். அவர் உடல் பயிற்சி மட்டுமல்ல, அவரது மன ஆரோக்கியத்திலும் பணியாற்றினார். ஐபிஎல் 2020 இல் (IPL 2020) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் வரிசையில் கில் ஒரு முக்கிய பகுதியாக இருப்பார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சர்மா, பிரபாசிம்ரன் மற்றும் அன்மோல்பிரீத் முறையே விளையாடுவார்கள். 

ALSO READ |  IPL 2020: CSK வீரர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்!! காரணம் என்ன?

அபிஷேக் சர்மா கூறுகையில், "அவர் எங்கள் திறன் மற்றும் மன ஆரோக்கியத்தில் பணியாற்றியது மட்டுமல்லாமல், பயிற்சி போட்டிகளிலும் எங்களுடன் விளையாடினார். வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப விளையாடச் சொன்னார். எங்களால் அதைச் செய்ய முடியாதபோது, ​​அதை எப்படி செய்வது என்று சுட்டிக் காட்டினார் எனக் கூறினார்.

அபிஷேக் சர்மா 2018 இல் 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை வென்ற அணியில் ஒரு வீரராக இருந்தார். அந்த அணிக்கு பிருத்வி ஷா தலைமை தாங்கினார். அதே நேரத்தில், பிரபாசிம்ரன் சிங், “இந்த சீசனில் மேலும் மேலும் போட்டிகளில் விளையாடுவதைப் பற்றி யோசித்து வருகிறேன். இந்த நேரத்தில் நான் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட தயாராக இருக்கிறேன். யுவி பா (யுவராஜ்) பெயரை பிரகாசமாக்க விரும்புகிறேன். "பிரபாசிம்ரனை பஞ்சாப் அணி கடந்த ஏலத்தில் ரூ .4.80 கோடிக்கு வாங்கியது. இந்த நான்கு வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸை அடைந்துள்ளனர்.

ALSO READ |  நீங்கள் என்னை மீண்டும் CSK முகாமில் காணலாம்: சின்ன தல சுரேஷ் ரெய்னா

Trending News