உள்ளாட்சித் தேர்தலின் தடைக்கு திமுக காரணம் அல்ல-ஸ்டாலின்!

உள்ளாட்சித் தேர்தல் நடக்காமலிருப்பதற்கு திமுகதான் காரணம் என அதிமுக கூறுவதை ஏற்று கொள்ள முடியாது என்று தி.மு.க செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார். 

Last Updated : Mar 23, 2018, 10:51 AM IST
உள்ளாட்சித் தேர்தலின் தடைக்கு திமுக காரணம் அல்ல-ஸ்டாலின்! title=

உள்ளாட்சித் தேர்தல் நடக்காமலிருப்பதற்கு திமுகதான் காரணம் என அதிமுக கூறுவதை ஏற்று கொள்ள முடியாது என்று தி.மு.க செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார். 

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்காமல், தமிழக அரசு மத்திய அரசிடம்வேண்டுதல் விடுத்து வருகின்றது. 

உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை. மேலும் உள்ளாட்சி தேர்தல் தாமதத்திற்கு திமுக காரணமில்லை. உள்ளாட்சித் தேர்தல் நடக்காமலிருப்பதற்கு திமுகதான் காரணம் என அதிமுக கூறுவதை ஏற்று கொள்ள முடியாது

மாநில மாநாட்டை மிஞ்சும் வகையில் ஈரோடு மண்டல மாநாடு இருக்கும் எனவும் இந்த மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதி கலந்துக் கொள்ள மாட்டார் எனவும் கூறினார்.

Trending News