தூத்துக்குடி அருகேயுள்ள குமரெட்டியாபுரம் கிராம பகுதியில், வே தாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை வெளியிடும் நச்சு புகை காரணமாக அந்த கிராம மக்கள், மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல், கருச்சிதைவு, புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது சிப்காட் விரிவாக்கப் பகுதியில் 2-வது ஆலையை நிறுவ உள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், சிப்காட் வளாகத்தில் அமைய உள்ள 2-வது ஆலைக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக்கூடாது வலியுறுத்தி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இந்த ஆலையால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட கண்டன போராட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தனது டிவிட்டரில், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடி மக்களுடன் நான் உள்ளேன் என்று பதிவி செய்துள்ளார்.
ஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ஸ்டெர்லைட் புரட்சியில் பங்கு பெறுவது கடமை.
தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக் களம் அழைத்தால் நான் வருவேன்.— Kamal Haasan (@ikamalhaasan) March 24, 2018
This anti -sterlite peoples agitation needs media support. My new status as a party leader need not be a disqualification or a deterent. I am still part of the Tamizh population. I am committed to this cause
— Kamal Haasan (@ikamalhaasan) March 24, 2018