தமிழகத்தில் வெயில் 100 டிகிரியை தாண்டியது?

Last Updated : Mar 27, 2017, 09:33 AM IST
தமிழகத்தில் வெயில் 100 டிகிரியை தாண்டியது? title=

தமிழகத்தில் வெயிலின் உக்கிரமும் தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று கோவை, கரூர், வேலூர் உள்பட நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டி பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக கரூரில் 104 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-

இன்னும் 4 முதல் 5 நாட்கள் வரை தமிழகத்தில் மழைக்கான பொழிய வாய்ப்பு கிடையாது. தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் இந்த முறை அதிகமாக இருக்கும்.எதிர்பார்த்தது போல், வெயிலின் தாக்கம் ஏப்ரல், மே மாதங்களில் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கோடை மழை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. தற்போது வெயிலின் தாக்கம் கொஞ்சம் குறைவாக தான் இருக்கிறது. அதனால் தான் கோடை மழை இல்லாமல் இருக்கிறது.

இவ்வாறு தெரிவித்தனர். 

Trending News