10 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து, பீடி புகைக்க வைத்ததாக 6 இளைஞர்கள்!

கிருஷ்ணகிரி அருகே 10 வயது சிறுமிக்கு மது மற்றும் புகையிலையை அளித்த 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Jul 23, 2022, 12:27 PM IST
  • விசாரணையில் அச்சிறுமிக்கு 10 வயது என்று தெரிய வந்தது.
  • இந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
10 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து, பீடி புகைக்க வைத்ததாக 6 இளைஞர்கள்! title=

கடந்த மாதம் சிறுமி ஒருவப் மது குடிப்பது போலவும், பீடி பற்ற வைத்து புகைப்பது போலவும், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாக பரவியது. இது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது, விசாரணையில் அச்சிறுமிக்கு 10 வயது என்றும், அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே உள்ள பெட்டமுகிளாலம் பூப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் என்றும், சிறுமியின் தந்தை ஒரு விவசாயி என்றும் தெரிய வந்தது.

மேலும் படிக்க | போரில் திருப்புமுனை; லிசிசான்ஸ்கில் இருந்து பின்வாங்கும் உக்ரைன் துருப்புக்கள்

மேலும், அச்சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் மதுவை டம்ளரில் ஊற்றி குடிக்க கொடுத்ததாகவும், பீடி புகைக்க பற்ற வைத்து கொடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து, பீடி புகைக்க பற்ற வைத்து கொடுத்ததாக அதே பகுதியை சேர்ந்த, சங்கையா (22) குமார் (21) ரமேஷ் (22) சிவராஜ் (27) ருத்ரப்பா (26) அழகப்பன் (26) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களோடு இருந்து தலைமறைவான சிவருத்ரப்பா, மல்லேஷ் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஓசூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் முக்கிய ராணுவ கூட்டத்தின் போது மயங்கி விழுந்தாரா; வெளியான பகீர் தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News