2.0' படத்தின் இணையவழி உரிமையை பெற்ற அமேசான்!

ரஜினியின் '2.0' திரைப்படத்தினை இணையத்தில் ஒளிபரப்புவதற்கான உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளது.

Last Updated : Nov 28, 2017, 03:52 PM IST
2.0' படத்தின் இணையவழி உரிமையை பெற்ற அமேசான்! title=

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் படம் ''2.0''. இப்படமானது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. இதில் ,எமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர்  நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில் படத்தை இணையத்தில் ஒளிபரப்புவதற்கான உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று பதிப்புகளுமே அமேசான் பிரைம் இணையதளத்தில் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக உரிமையை பெற இதுவரை இல்லாத அளவு அதிக விலைக்கு பெறப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாராகி வரும்  2.0 திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை சுமார் 110 கோடி ரூபாய்க்கு ஏற்கனவே விற்கப்பட்டுள்ளது. என்பது குறிபிடத்தக்கது. 

Trending News