மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்த மனோகர் சிங் என்பவரை கார்வார் அருகே ரயில்வே போலீசார் அபராதம் விதித்தனர். அப்போது இளைஞரின் பார்வையில் சந்தேகம் அடைந்த போலீசார், அங்கேயே நின்று விசாரித்தனர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதலளித்திருக்கிறார். அபராதம் கட்ட இளைஞர்தான் வைத்திருந்த பையில் கையை விட்டு தேடி கொண்டிருக்க, போலீசாரின் கவனம் அந்த பையின் மேல் விழுந்தது, அவ்வளவுதான்...
பையை பிரித்து பார்த்த ரயில்வே போலீசார் மிரண்டு போயிருக்கிறார்கள். பை முழுவதும் புதிய இரண்டாயிரம் பணக்கட்டுகள். தோராயமாக கோடிக்கு மேல் இருக்கும் என யூகித்த அதிகாரிகள் பணத்திற்காக அவனங்களை கேட்க பணக்கட்டுகளை தவிர அவரிடம் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
இளைஞரை கையோடு பிடித்து ரயிலில் இருந்து கீழிறக்கினார்கள். சிக்கிய பண பையை எடுத்து கொண்டு இளைஞரை ரயில்வே காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதற்கிடையே, ரயில் நிலையத்தில் குவிந்த போலீசாரால் சக பயணிகள் அலறி போனார்கள்.
மேலும் படிக்க | நானும் போலீஸ்தான் ; நானும் போலீஸ்தான் - டம்மி போலீசை போட்டு கொடுத்த மனைவி!
நூறு கட்டுகள் கொண்ட இரண்டு கோடி ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. முதலாளியின் பையை மங்களூரில் ராஜு என்பவருக்கு கொடுக்க மும்பையில் இருந்து மங்களூருக்கு வந்ததாக பிடிபட்ட இளைஞர் போலீசில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். ரயில்வே போலீசார் குற்றவாளியை கார்வார் கிராம காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | திருமண வீட்டில் மது விருந்து ; குடித்துவிட்டு தண்டவாளத்தில் உறங்கிய நண்பர்கள் பலி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR