சென்னை, November 08, 2024: KYN (Know Your Neighbourhood), மக்கள் தங்களின் இருப்பிடத்தில் இருந்தே தங்கள் பகுதியைச் சுற்றி உள்ள தகவல்களை அறிந்து கொள்ள, Hyperlocal முறையில் புதிய செயலியாக உருவாகி உள்ளது KYN. இந்த செயலி மூலம் பயனாளர்கள் தங்களது திறமையை உலகுக்கு காட்ட இயலும்.
KYN செயலி, இளைஞர்களின் திறமையை வெளிப்படுத்த பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சினிமா கனவுடன் இருக்கும் இளைஞர்களுக்காக KYN - Take one குறும்படப் போட்டி ஒன்றை நடத்தியது.
குறும்பட போட்டி:
இந்த Take one குறும்படப் போட்டி மூலம், திரைப்படம் இயக்கும் முயற்சியில் இருக்கும் இளம் இயக்குநர்கள், சினிமாவில் சாதிக்க காத்திருக்கும் இளைஞர்கள் தங்களது குறும்படங்களை அனுப்ப அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் முதல் சுற்றில் 500 படங்கள் சமர்பிக்கப்பட்டது. அதில் இருந்து சிறப்பான 45 படங்களை நடுவர் குழு தேர்வு செய்தது. ஒவ்வொரு குறும்படமும் புது வித கதை சொல்லல், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் என ஆச்சர்யப்படுத்தி இருந்தனர்.
இயக்குனர்கள் கெளதம் வாசுதேவ் மேனன், புஷ்கர்-காயத்ரி, தயாரிப்பாளர்கள் ஷசிகாந்த், சமீர் பரத் ராம் ஆகியோர் நடுவர்களாக இருந்து இந்தப் படங்களைத் தேர்வு செய்தனர். மிகவும் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டு இருந்த மூன்று படங்கள் குறும்படப் போட்டியின் இறுதி விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள காட்சி அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், வெற்றி பெற்ற இளம் இயக்குநர்கள் சிறப்புப் பரிசுகளும், கேடயமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
இதுகுறித்து பேசிய KYN செயலியின் தலைமை செயல் அதிகாரி காயத்ரி தியாகராஜன், “புதிய தலைமுறையினரான GenZ/ Gen Alpha இளைஞர்கள் ஷார்ட்ஸ், ரீல்ஸ் வீடியோக்களை அதிகம் ரசிக்கின்றனர். அந்த வகையில், இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கவும், புதிய தலைமுறையினருக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவுமே KYN செயலி, Take one குறும்படப் போட்டி நடத்தியது” எனக் குறிப்பிட்டார்.
இதில் முதல் பரிசான ஒரு லட்ச ரூபாயை ‘எத்தனை காலம் தான்’ படத்தை இயக்கிய விக்னேஷ் குமாருக்கும், இரண்டாம் பரிசான 75,000 ரூபாயை ‘மா’ திரைப்படத்தை இயக்கிய ஷலாலுதீன் சாத்துவுக்கும், மூன்றாம் பரிசான 50,000 ரூபாயை ‘ஒரு மெல்லிசான கோடு’ படத்தை இயக்கிய ராம் கெளதமுக்கும் வழங்கப்பட்டது.