புதியதாக கழிப்பறை, குளியலறை கட்டிடங்கள் கட்ட கிரிவலப் பாதையில் 24 இடங்கள் தேர்வு

கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் துரிதமாக செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல்.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Jun 8, 2024, 07:04 PM IST
  • மாத மாதம் வரும் பௌர்ணமி கிரிவலம் உலக பிரசித்தி பெற்றது.
  • 14 கிலோ மீட்டர் கிரிவலம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்
  • திருவண்ணாமலை கிரிவலப் பாதை முழுவதும் சுமார் 24 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
புதியதாக கழிப்பறை, குளியலறை கட்டிடங்கள் கட்ட கிரிவலப் பாதையில் 24 இடங்கள் தேர்வு title=

கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் துரிதமாக செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல்....

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை நகரில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலாகும், அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம், இதில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, சித்ரா பௌர்ணமி மற்றும் மாத மாதம் வரும் பௌர்ணமி கிரிவலம் உலக பிரசித்தி பெற்றது. 

இது போன்ற விழா காலங்களில் வெளிமாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்து 14 கிலோ மீட்டர் கிரிவலம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

மேலும் படிக்க | திமுக கூட்டணியால் பலன் ஒன்றுமில்லை என தமிழிசை சவுந்திர ராஜன் விமர்சனம்

லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வதால் பக்தர்களுக்கு தேவையான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, தங்குமிடம், அன்னதான கூடம் உள்ளிட்டவகள் கிரிவலப் பாதையில் இருந்தாலும் கூடுதலாக பல்வேறு இடங்களில் புதியதாக அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர், இதனை தொடர்ந்து புதிய கழிப்பிடம், குளியலறை, ஓய்வு அரை, அன்னதான கூடம் ஆகியவற்றை கட்டுவதற்காக திருவண்ணாமலை கிரிவலப் பாதை முழுவதும் சுமார் 24 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. 

இந்த 24 இடங்களை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இன்று பார்வையிட்டனர்.

திருவண்ணாமலை நகரில் உள்ள அண்ணா நுழைவாயில் அருகே துவங்கிய இந்த பணியானது மத்திய பேருந்து நிலையம், பெரிய தெரு, செங்கம் சாலை சந்திப்பு, திருநேர் அண்ணாமலையார், கோசாலை, அடிஅண்ணாமலை உள்ளிட்ட கிரிவலப் பாதையில் பல்வேறு இடங்களில் நேரில் சென்று இடங்களை பார்வையிட்டு தேர்வு செய்யப்பட்டது. 

இதுகுறித்து விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழக அரசிற்கு அனுப்பி விரைவில் இந்த பணிகள் துவங்கப்படும் எனவும், இந்த பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முழுவதும் மாவட்ட நிர்வாகத்தால் செய்து தரப்படும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்தார். 

மேலும் படிக்க | வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்: எடப்பாடி பழனிச்சாமி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News