சேலம் ஓமலூர் அதிமுக புறநகர் கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசிய விவரங்களை இங்கே காணலாம்.
'நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஊடகங்களில் விவாதம் நடக்கிறது. எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் நட்டா, அமித்ஷா, பல மத்திய அமைச்சர்கள் வேட்பாளர்களை கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் அவர்களும், கூட்டணியில் அங்கம் வகித்த பல்வேறு தலைவர்களும் பிரச்சாரம் செய்தனர்.
திமுக பொருத்தவர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வாக்குகள் சேகரித்தனர். கூட்டணியில் அங்கம் வசித்த காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்தியும் பிரச்சாரம் செய்தார். விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளனும் பிரச்சாரம் செய்தார். கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களும் பிரச்சாரம் செய்தனர்.
அதிமுகவில் நான் ஒருவன் தான் பிரச்சாரம் செய்தேன். கூட்டணியிலிருந்து தேமுதிக தலைவர்களும் பிரச்சாரம் செய்தனர். இந்தியா கூட்டணிக்கு பலம் அதிகம். அதிமுக கூட்டணிக்கு பலம் இல்லை என பத்திரிகைகள் ஊடகங்களில் தொடர்ந்து வந்தது. இதற்கிடையே அதிமுக 2019 நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளுடன் தற்போது ஒரு சதவீதம் வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது. இது அதிமுக கிடைத்த வெற்றியாகும்.
பாரதிய ஜனதா கட்சி குறைவான வாக்குகள் பெற்றிருக்கிறது. திமுகவும் குறைவான வாக்கு பெற்றிருக்கிறது. அந்தந்த தேர்தலில் சூழ்நிலைக்கு தக்கவாறு வெற்றி தோல்வி அமையும். ஒரு கட்சி தோல்வி அடைந்தால் மீண்டும் தோல்வி அடையும் என்பதில்லை' என்றார்.
சசிகலா, ஓபிஎஸ் பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவோம் என்று கூறியிருக்கிறார்களே என்ற கேள்விக்கு, 'அது முடிந்து போன கதை . வேண்டும் என்றே குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கூறுகின்றனர். அவர்களெல்லாம் பிரிந்து சென்றதால், ஒரு சில இடங்களில் கூடுதலாக வாக்குகள் கிடைத்துள்ளது' கூறினார்.
'கோவையில் அண்ணாமலை குறைவான வாக்குகள் தான் வாங்கி உள்ளார். ஒவ்வொரு முறையும் நாடாளுமன்ற தேர்தல் என்றாலும், சட்ட்சபைத் தேர்தல் என்றாலும் வாக்கு வித்தியாசம் மாறி மாறி தான் வரும். சூழ்நிலைக்கு தக்கவாறு மக்கள் வாக்களிக்கிறார்கள். 2024 தேர்தலில் அதிகமான வாக்குகள் பெற்றுள்ளது. இதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து விட்டதாக செய்திகள் வருகிறது. தேர்தலில் பாஜக கூட்டணி அதிகவாக்குகள் பெற்றதாக தவறான செய்தி வருகிறது.
திமுக 2019ஆம் ஆண்டு 33.52 சதவீதம். இந்த 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 26.93 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. திமுகவின் வாக்குசதவீதம் குறைந்திருக்கிறது. அதிமுக தான் கூடுதல் வாக்குகள் பெற்றிருக்கிறது. பாரதிய ஜனதா குறைவான வாக்குகள் பெற்றிருக்கிறது, திமுகவும் குறைவான வாக்கு பெற்றிருக்கிறது.' என்றார் எடப்பாடி பழனிச்சாமி.
தென்மாவட்டங்களில் அதிமுக வலுப்பெற்று இருக்கிறதா என்ற கேள்விக்கு, 'தற்போது நடந்தது பாராளுமன்றத் தேர்தல் வேறு? சட்டமன்றத்தேர்தல் இல்லை. பாராளுமன்றத் தேர்தல் மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற தேர்தலாகும். அதிமுக வளர்ந்துதான் வருகிறது. அந்தந்த தேர்தலில் சூழ்நிலைக்கு தக்கவாறு வெற்றி தோல்வி அமையும். ஒரு கட்சி தோல்வி அடைந்தால் மீண்டும் தோல்வி அடையும் என்பதில்லை. திட்டமிட்டு பொய்யான தகவல்களை தெரிவிக்கின்றனர்.
சட்டமன்ற தேர்தல் வேறு, பாராளுமன்ற தேர்தல் வேறு. மக்கள் பிரித்துப் பார்த்துதான் வாக்களிக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் விழிப்புடன் உள்ளனர். எந்த சமயத்தில் எப்படி வாக்களிக்க வேண்டும் என கருதி வாக்களிக்கிறார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். வரும் சட்டமன்றத் தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்.
நான் முதலமைச்சரானபோது பல்வேறு தகவல்கள் வந்தது. மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு இருப்பாரா? நான்காண்டு இரண்டு மாதம் சிறப்பான ஆட்சி தந்ததாக பேசியவர்கள், பிறகு கட்சி இரண்டாகும் என அவதூறு பிரச்சாரம் செய்தனர்.
மேலும் படிக்க | வன பத்திரகாளியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் டிஸ்மிஸ் - அரசு நடவடிக்கை பின்னணி
அதிமுக தலைவர் காலத்திலும் சரி ஜெயலலிதா காலத்திலும் சரி தொடர்ந்து தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்பட்டது. வெற்றி வரும்வரை பயன்படுத்திக் கொள்கிறார்கள். வெற்றி பெற்ற பின்னர் தமிழகத்தை மறந்து விடுகிறார்கள். இந்த நிலை மாறவேண்டும் என்பதால்தான் தனித்துப் போட்டியிட்டது. ஆட்சி அதிகாரம் வேண்டுமென்றால் தேசிய கட்சியுடன் அதிமுக சேர்ந்து இருக்கும்' என்றார்.
'தமிழ்நாட்டு உரிமையை காக்கவும், உரிமைகள் பறிபோகும்போது தடுக்கவும் நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக செயல்படவும் அதிமுக இந்த முடிவை எடுத்தது. தமிழக புதுவை சேர்த்து நாடாளுமன்ற 40 தொகுதிகளில் வென்ற திமுக கூட்டணி என்ன சாதிப்பார்கள் என பார்க்கத்தானே போகிறோம்' என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு செல்வீர்களா என்று கேட்டதற்கு அதை பற்றி இன்னும் சிந்திக்கவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுகவுக்கு கூட்டணி இல்லை என்று ஏற்கனவே நான் கூறியது தான், மீண்டும் தெரிவிக்கிறேன் என்றும் அவர் கூறினார்.
மேலும் நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வாக்களித்த வேட்பாளர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். 'எங்களது வேட்பாளர்கள் வெற்றி பெற உழைத்த அனைத்து நிர்வாகிகளுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் நேரத்தில் எங்களுடன் கூட்டணி அமைத்து அந்த கூட்டணி வேட்பாளர்களுக்கும் வாக்களித்த பொதுமக்களுக்கும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றும் தெரிவித்தார்.
தேமுதிக மறுவாக்கு எண்ணிக்கை நடத்தவேண்டும் என கூறி உள்ளனர் என்ற கேள்விக்கு, 'மறுவாக்கு எண்ணிக்கை நடத்தவேண்டும் என கேட்டுள்ளனர். நீதிமன்றத்துக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து என்னிடம் கூறினர்' என்றார்.
அதிமுக நிர்வாகிகள் பாஜகவுக்கு ஆதரவு தந்ததாக கூறுகிறார்கள் என்று கேட்டதற்கு, அப்படி இருந்தால் எப்படி ஒரு சதவீதம் வாக்கு அதிகரித்திருக்கும் என்று கேள்வி எழுப்பினார். அவதூறு பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ