கொரோனா வைரஸ் நோய் தொடர்பான உதவிகளை பெற சுகாதாரத்துறை ஹெல்ப்லைன் எண்ணை வெளியிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகான் நகரில் வசித்து வரும் மக்களை கடந்த மாத இறுதியில் கொரோனா எனப்படும் கொடிய வைரஸ் தாக்கியது. இந்த வைரசால் புதுவித நிமோனியா நோய்க்கு ஆட்பட்ட அவர்கள் அடுத்தடுத்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இந்த நோய் தீவிரமடைந்து உயிரிழப்புகள் ஏற்பட்டன.
இந்த வைரஸ் சீனாவின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசுக்கு இதுவரை மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஹுபெய்யை சுற்றியுள்ள மாகாணங்களிலும் பெருத்த சேதங்களை கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 80 ஆக உயர்ந்தது. அங்கு 2,684 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடிமக்களுக்கு நிவாரணம் வழங்க சீன அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்பது உட்பட அனைத்து திட்டங்களையும் இந்திய அரசாங்கமும் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகமும் பரிசீலித்து வருகின்றன. குறிப்பாக அங்கு உள்ள மாணவர்களை எப்படி வெளியேற்றுவது என ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொடர்பாக, பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அமைத்துள்ள இரண்டு ஹாட்லைன் எண்களுக்கு ஏராளமான தொலைபேசிகள் வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, +8618610952903 என்ற எண்ணில் மூன்றாவது ஹாட்லைன் சேவையை தொடங்க தூதரகம் முடிவு செய்துள்ளது. ஹாட்லைன் எண்கள் +8618612083629 மற்றும் +8618612083617 என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் நோய் தொடர்பான உதவிகளை பெற சுகாதாரத்துறை ஹெல்ப்லைன் எண்ணை வெளியிட்டுள்ளதாக தமிழக அரசு டிவிட்டரில் தெரிவித்துள்ளது. அதில்,
கொரோனா வைரஸ் நோய் தொடர்பான உதவிகளை பெற 9111-23978046 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் - சுகாதாரத்துறை அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை - மாண்புமிகு அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் அவர்கள் அறிவிப்பு.
கொரோனா வைரஸ் நோய் தொடர்பான உதவிகளை பெற 9111-23978046 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் - சுகாதாரத்துறை அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை - மாண்புமிகு அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் அவர்கள் அறிவிப்பு. #Coranovirus
— AIADMK (@AIADMKOfficial) January 27, 2020
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.