நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.க்கள் 5 நாட்கள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அதிரடி

மக்களவையில் இருந்து அதிமுக எம்.பிக்கள் 5 நாட்களுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 2, 2019, 07:02 PM IST
நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.க்கள் 5 நாட்கள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அதிரடி title=

மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இன்று (புதன்கிழமை) 26 அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த எம்.பிக்களை (AIADMK) இடைநீக்கம் செய்தார்.

தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தொடரில் அதிமுக எம்.பிக்கள் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோசமிட்டபடியே அவையின் மையப்பகுதிக்கு சென்று அமளி செய்தனர். மறுதரப்பில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாடளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறி காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல மாநிலங்களவையில் அதிமுக மற்றும் திமுக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். 

மீண்டும் 2 மணிக்கு மக்களவை கூடியதும் அதிமுக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமளியில் ஈடுபட வேண்டாம் என்று தொடர்ந்து எச்சரித்து வந்தார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன். ஆனால் சபாநாயகரின் உத்தரவை மீறி தொடர் அமளியில் ஈடுபட்டதால், 374ஏ விதிப்படி அதிமுகவை சேர்ந்த 26 எம்.பிக்களை 5 நாட்களுக்கு இடை நீக்கம் செய்தார் மக்களவை சபாநாயகர்.

Trending News