’கொத்தடிமை ஒப்பந்தம்’ ரூ.62,000-க்கு விற்பனை செய்யப்பட்ட 4 சிறுவர்கள்!

தஞ்சையில் 62 ஆயிரம் ரூபாய்க்கு கொத்தடிமைகளாக விற்பனை செய்யப்பட்ட 4 சிறுவர்களை காவல்துறையினர் மீட்டனர்

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - S.Karthikeyan | Last Updated : Dec 14, 2021, 03:18 PM IST
  • குடும்ப சூழ்நிலையால் 4 சிறுவர்களை ரூ.62,000-க்கு விற்பனை செய்த தந்தை
  • சிறுவர்கள் நான்கு பேரும் 2 ஆண்டுகளுக்கு ஆடு மேய்க்க வேண்டும்
  • தகவலறிந்த காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் சிறுவர்களை மீட்டனர்
’கொத்தடிமை ஒப்பந்தம்’ ரூ.62,000-க்கு விற்பனை செய்யப்பட்ட 4 சிறுவர்கள்! title=

தஞ்சை வல்லம்புதூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மனைவி பாப்பாத்தி. இருவரும் கறி புகைமூட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு நான்கு மகன்கள், ஒரு மகள் என மொத்தம் ஐந்து பிள்ளைகள். மகளுக்கு திருமணமான நிலையில் நான்கு மகன்களுடன் சுந்தர்ராஜன் வசித்து வருகிறார். சுந்தர்ராஜனுக்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

ALSO READ | ரயில்வே இருப்புப் பாதையை கடக்க முயன்ற கல்லூரி மாணவர் ரயிலில் சிக்கி பலி

கோவிந்தராஜ் என்பவர் அவர் அண்ணன் மற்றும் மைத்துனருடன் ராமநாதபுரத்தில் உரத்திற்காக செம்மறியாடு மேய்த்து வருகிறார். கரிப்புகை மூட்டுவதில் போதுமான வருவாய் இல்லாததால், வறுமையில் இருந்த சுந்தர்ராஜன் தன்னுடைய 4 மகன்களையும் 62 ஆயிரம் ரூபாய்க்கு கோவிந்தராஜனிடம் கொத்தடிமைகளாக விற்பனை செய்துள்ளார். இந்த தொகைக்கு சிறுவர்கள் நான்கு பேரும் இரண்டு ஆண்டுகள் செம்மறியாடு மேய்க்க வேண்டும் என்பது ஒப்பந்தம்.

ALSO READ | குடும்பம் நடத்த வராத மனைவியை கொலை செய்த கணவர் கைது!!

அதன்படி, சிறுவர்கள் நான்கு பேரும் தஞ்சை மாவட்டம், சூரக்கோட்டை அருகே ஆடு மேய்த்துக் கொண்டு இருந்துள்ளனர். இதனையறிந்த சமூக ஆர்வலர் ஒருவர், 1098 என்ற எண்ணுக்கு அழைத்து சைல்டு லைன் (CHILDLINE India Foundation) என்ற தன்னார்வ தொண்டு அமைப்பிடம் விவரத்தைக் கூறியுள்ளார். தகவல்களைப் பெற்றுக்கொண்ட அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், உடனடியாக காவல்துறை மற்றும் வருவாய் துறை உதவியுடன் சிறுவர்கள் இருக்கும் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், கொத்தடிமையாக இருப்பதில் இருந்து அவர்களை மீட்டு சிறுவர்கள் இல்லத்தில் சேர்த்தனர். மேலும், சிறுவர்களிடம் கொத்தடிமை விடுதலை உத்தரவை வழங்கிய அதிகாரிகள், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News