தமிழகத்தில் 48 புதிய கொரோனா வழக்குகள் பதிவானது; மொத்த எண்ணிக்கை 738...

புதன் அன்று தமிழகத்தில் 48 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியிருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Last Updated : Apr 8, 2020, 07:04 PM IST
தமிழகத்தில் 48 புதிய கொரோனா வழக்குகள் பதிவானது; மொத்த எண்ணிக்கை 738... title=

புதன் அன்று தமிழகத்தில் 48 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியிருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாநிலத்தில் மொத்த நேர்மறையான வழக்குகளின் எண்ணிக்கையை 738-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 21 நோயாளிகள் இதுவரை குணமடைந்துள்ளனர் மற்றும் 8 பேர் இந்த நோயால் இறந்துள்ளனர் எனவும் தமிழக அரசு அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் 5 நோயாளிகள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதார செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், புதிய 48 வழக்குகளில், 42 நபர்களின் தொற்று ஒரே மூல நிகழ்விலிருந்து பெறப்பட்டுள்ளது. அதாவது மார்ச் 8 முதல் மார்ச் 21 வரை புதுடெல்லியில் நடைபெற்ற தப்லிகி ஜமாஅத் மாநாட்டில் இருந்து பெறப்பட்டுள்ளது. 42 புதிய வழக்குகளில், 8 பேர் ஒரு குழுவாகப் பயணம் செய்தவர்கள். மேலும் 33 பேர் அவர்களது தொடர்புகள் என்றும் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

அதே நிகழ்வில் இடம்பெற்ற ஒரு மலேசிய நாட்டவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மீதமுள்ள 6 பேரில், இருவர் ஏற்கனவே தனிமைப்படுத்தலில் இருவந்தவர்கள், மற்றும் 4 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள், அவர்களின் நோய்த்தொற்றின் ஆதாரம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த நபர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பியபோது, ​​பீலா ராஜேஷ், “தற்போது வரை, ஒற்றை மூல நிகழ்வில் கலந்து கொண்ட 1480 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். காவல் துறை உதவி கொண்டு அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார். 

புதன்கிழமை நிலவரப்படி, ஒரு மூல நிகழ்விலிருந்து 679 நபர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் எனவும் அவர் மேற்கோளிட்டார். இதில் நிகழ்வுக்கு ஒரு குழுவாக பயணித்த 553 பேரும், அவர்களின் 105 தொடர்புகளும் அடங்கும். 679 நேர்மறையான வழக்குகளில் ஏழு வெளிநாட்டினர் மற்றும் அவர்களது 14 தொடர்புகளும் அடங்கும். 

தற்போதைய நிலவரப்படி 344 மாதிரிகள் செயல்பாட்டில் உள்ளன என்றும் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

ஒற்றை மூல நிகழ்வுடன் எந்த தொடர்பும் இல்லாதவர்களையும் தமிழக அரசு பரிசோதித்து வருவதைக் குறிக்கும் பீலா ராஜேஷ், பிப்ரவரி முதல் கடுமையான சுவாச நோய்த்தொற்றுடன் (SARI) காண்பிப்பவர்களையும் இந்தத் துறை பரிசோதித்து வருகிறது என்றார்.

48 புதிய வழக்குகளில், தேனி மாவட்டத்தில் 16 வழக்குகள் பதிவாகியுள்ளன, சென்னையில் 7 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் புதன்கிழமை மாலை நிலவரப்படி மொத்தம் 156 கோவிட் -19 வழக்குகள் உள்ளன, இது தமிழ்நாட்டில் அதிக வழக்கு கொண்டுள்ள பகுதியாகும். கோயம்புத்தூரில் 60 வழக்குகளும், திண்டுக்கல் மாவட்டத்தில் 46 வழக்குகளும் பதிவாகியுள்ளன. 

Trending News