கன்னியாகுமரி மாவட்டம் லெமூரியா கடற்கரைக்கு சுற்றுலா வந்த திருச்சி மருத்துவ கல்லூரி மாணவ, மாணவியர்கள் கடலில் இறங்கி குளிக்கும் போது, ராட்சத அலைகள் இழுத்து சென்றதில் 3 மாணவிகள் 2 மாணவர்கள் உட்பட 5 பேர்கள் பலி உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆராய்ச்சி மையம் தென் தமிழக கடல் பகுதிகளில், குறிப்பாக கன்னியாகுமரி, கேரளா கடல் பகுதிகளில் கடல் சீற்றம் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் என தெரிவித்திருந்தது.
மேலும் படிக்க | நாளை வெளியாகிறது பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: ரிசல்ட் லிங்க் இதோ
குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இதனால் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. கோடை காலம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி கடல் பகுதிகளுக்கு சுற்றுலா வருவார்கள், எனவே மாவட்ட நிர்வாகம் சார்பிலும் கடலில் யாரும் இறங்க வேண்டாம் என்று எச்சரிக்கை ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடல் அலையில் சிக்கி தேங்காய் பட்டினத்தில் ஒரு சிறுமியும், குளச்சல் அருகே சென்னை சேர்ந்த இரண்டு பேரும் நேற்று பலியானார்கள். இந்த நிலையில் இன்று திருச்சியை சேர்ந்த 13 மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளார்கள்.
நாகர்கோவிலை அடுத்துள்ள கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட லெமுரியா பீச்சில் அவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது ஐந்து பேரை திடீரென ராட்சஷ அலைகள் இழுத்துச் சென்றது. குளச்சலில் இருந்து கடலோர காவல் படை சாருஹாபி சுருதி, சரண்யா ஆகிய இரண்டு மருத்துவக் கல்லூரி மாணவிகளின் உடலை மீட்டு உள்ளனர். மேலும் 3 பேரை தேடும் பணியில் கடலோர காவல் படை தீவிரமாக ஈடுபட்டு அவர்கள் உடலையும் மீட்டது. 13 பேர்கள் சுற்றுலா வந்ததில் 7 பேர்கள் மட்டும் கடலில் இறங்கியதில் 5 மருத்துவ கல்லூரி மாணவ மாணவியர்கள் பலியாகியுள்ளனர். 2 பேர் காயத்துடன் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் கடற்பகுதிக்கு மக்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விடுத்த எச்சரிக்கையும் மீறி லெமூர் கடற்பகுதியில் குளித்து இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், லெமூர் கடற்கரைக்கு செல்லும் வழிகள் அடைக்கப்பட்டன.
மேலும் படிக்க | மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம்! நெறிமுறைகள் என்னென்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ