தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சில நாட்களாக ஓரிரு இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai Meteorological Department) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் (Tamil Nadu), வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ALSO READ | மழை காலங்களில் துவைத்த துணிகளை உலர்த்த 4 எளிய வழிகள்!
அதன்படி, காற்றின் திசைவேக மாறுபாடு மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
இதேபோல், நாளையும், நாளை மறுதினமும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் அதாவது கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனியில் கனமழையும், மீதமுள்ள மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ALSO READ | செய்தியாளர், ஊடகவியலாளர்களுக்கு ஜூலை 6 ஆம் தேதி தடுப்பூசி முகாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR