அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகமே நடத்த முடிவு!

ஜல்லிக்கட்டு குழு அமைப்பதில் உடன்பாடு ஏற்படாததால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகமே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 10, 2022, 06:36 PM IST
அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகமே நடத்த முடிவு! title=

தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக நிலையான வழிகாட்டுதல்களை வெளியீட்டு உள்ள நிலையில் மதுரை ஆட்சியர் அலுவலக கூட்டய அரங்கில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர்  ஜல்லிக்கட்டு நடத்துவது  தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் பத்திரப் பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி  மாவட்ட எஸ்பி பாஸ்கரன் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், அனைத்து துறை அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஜல்லிக்கட்டு குழு அமைப்பதில் உடன்பாடு ஏற்படாததால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அரசே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசிடம் அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

ALSO READ | Pongal 2022: முகூர்த்த காலுடன் தொடங்கியதா அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி?

ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பி.மூர்த்தி ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற வீரர் மற்றொரு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள முடியாது. கொரானா தொற்று அதிகரித்து வருவதால் ஜல்லிக்கட்டு போட்டியில் இந்தாண்டு நேரடியாக டோக்டன் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டு, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடிவீரர்கள் / மாட்டு உரிமையாளர்கள் இணைத்தில் மூலம் பதிவு செய்ய வேண்டும் என நிர்வாகம் கூறியுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியில் டோக்கன் வழங்குவதில் 1% கூட முறைகேடு நடக்காது. ஜல்லிக்கட்டு பார்வையிட வெளி மாவட்ட நபர்கள் கூட அனுமதி இல்லை.  இந்த ஆண்டு மாடு பிடி வீரர்கள், மாட்டு உரிமையாளர்களுக்கு காலை, மதியம் இரண்டு வேளை உணவு வசதி ஏற்பாடு செய்யப்படும். தற்காலிக கழிப்பறை வசதியும் ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

பின்பு பேசிய தென்மண்டல ஐ.ஜி. அன்பு ஜல்லிக்கட்டு போட்டிக்கு உறவினர்களை அழைக்க வேண்டாம். ஜல்லிக்கட்டு நடக்கும் கிராமத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும். ஜல்லிக்கட்டு போட்டியில் அடையாள அட்டை இல்லாத நபர்களை சோதனை சாவடி முன்பாகவே திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

ALSO READ | ஜல்லிக்கட்டு போட்டி - புதிய விதிமுறைகளுடன் அரசாணை வெளியீடு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News