73 மீனவர்களை மீட்டுள்ளோம்; டி. ஜெயகுமார் பேட்டி!

தமிழ்நாடு மீன்துறை அமைச்சர் டி. ஜெயகுமார் 6 படகுகள் மற்றும் 73 மீனவர்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.   

Last Updated : Dec 2, 2017, 03:25 PM IST
73 மீனவர்களை மீட்டுள்ளோம்; டி. ஜெயகுமார் பேட்டி! title=

கன்னியாகுமரியின்  தென்கிழக்கே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 29-ம் தேதி முதல் ‘ஒக்கி‘ புயலாக உருவெடுத்தது. தொடர்ந்து அதே இடத்தில் புயல் மையம் கொண்டிருந்ததால், அன்று நள்ளிரவு முதல், வியாழக்கிழமை மாலை வரை 80 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றுடன் கூடிய மழை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை தாக்கியது.

தொடர் மழை காரணமாக ஏராளமான படகுகள் கடலில் மூழ்கியும், 500-க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தும் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புயல் எச்சரிக்கைக்கும் முன்னதாகவே குமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற 830 மீனவர்கள், நாட்டுப்படகு மீனவர்கள் 28 பேர் மாயாமாகியுள்ளதாக, மீனவர் பிரதிநிதிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடலுக்குச் சென்ற மீனவர்களை விரைவில் கண்டுபிடித்துத் தரக்கோரி குமரி, சின்னத்துறை மாநில நெடுஞ்சாலையில் மீனவர் குடும்பத்தினர் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டி ருந்தனர்.

இது தொடர்பாக மிழ்நாடு மீன்பிடி அமைச்சர் டி. ஜெயகுமார் கூறுகையில்;-ஐ.எஸ்.எஸ். கப்பல்களினால் மேற்கொள்ளப்பட்ட யூனியன் அரசின்  மிகப்பெரிய  உதவியுடன் 6 படகுகள் மற்றும் 73 மீனவர்களை நாங்கள் மீண்டும் கொண்டு வந்திருக்கிறோம்.

மேலும், காணாமல் போன 33 படகுகள் மற்றும் 95 மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுவருவதாகவும் கூறினார். 

Trending News