திரைப்பட விநியோகஸ்தர்களிடமிருந்து பாதுகாப்பு தரக் கோரி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வந்தது தர்பார் திரைப்படம். லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து இருந்தது. பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான தர்பார் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன.
இதற்கிடையே, தர்பார் திரைப்படம் திரையரங்குகளில் போதுமான அளவில் வசூல் ஈட்டவில்லை எனவும் இதன் காரணமாக விநியோகஸ்தர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில், தங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை சந்திக்க அவர்கள் முயற்சி செய்தனர். மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் சென்னையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
இந்நிலையில் 'தர்பார்' திரைப்படத்தால் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறும் திரைப்பட விநியோகஸ்தர்களிடமிருந்து பாதுகாப்பு தரக் கோரி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
Film director A.R. Murugadoss approaches Madras High Court seeking police protection from film distributors, who claim to have incurred losses due to Rajinikanth starrer film 'Darbar'. pic.twitter.com/3qUQ3DuhkQ
— ANI (@ANI) February 6, 2020