புதுச்சேரி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி கூட்டப்பட உள்ளதாக அவை செயலர் வின்சென்ட் ராயர் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கூட்டப்பட உள்ளதாக அவை செயலர் வின்சென்ட் ராயர் அறிவித்துள்ளார். இந்த சிறப்பு கூட்டத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு , ஏ.எப்.டி. ஆலை மூடும் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் இந்த சிறப்பு பேரவை கூட்டத்தில் மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
A special session of Puducherry assembly to be convened on 12th February at 09.30 am. pic.twitter.com/zD2QmPYjnk
— ANI (@ANI) January 28, 2020
புதுச்சேரி சிறப்பு கூட்டத்தில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் தொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை இன்று கூடி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து, சட்டப்பேரவைச் செயலர் வின்சென்ட் ராயர் வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில், "புதுச்சேரி சட்டப்பேரவை 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை மண்டபத்தில் கூட்டப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.