Watch Video: மதுரை செல்லூர் வைகை பாலத்தில் முட்டி மோதும் நச்சு நுரைகள்.. !!

மதுரை செல்லூரில் வைகை பாலம் மீது நச்சு நுரைகள் வந்து அலையை போல் மோதும் காட்சி மிகவும் வைரலாகி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 28, 2020, 02:07 PM IST
  • மதுரை செல்லூரில் வைகை பாலம் மீது நச்சு நுரைகள் வந்து அலையை போல் மோதும் காட்சி மிகவும் வைரலாகி வருகிறது.
  • மதுரையில் குறிப்பிடத்தக்க வகையில், நேற்றிரவு பலத்த மழை பெய்தது, அதைத் தொடர்ந்து குளம் மற்றும் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்தது.
Watch Video: மதுரை செல்லூர் வைகை பாலத்தில் முட்டி மோதும் நச்சு நுரைகள்.. !! title=

மதுரை செல்லூரில் வைகை பாலம் மீது நச்சு நுரைகள் வந்து அலையை போல் மோதும் காட்சி மிகவும் வைரலாகி வருகிறது.

புதுடில்லி: சனிக்கிழமை வைகை நதி மற்றும் செல்லூர் கண்மாயில் சில பகுதிகளில் நச்சு நுரை அலை போல் பெருகி வந்து மோதியதால், மதுரை உள்ளூர்வாசிகள் அதை பார்த்து திகைத்துப் போயினர். சுமார் 15 அடி உயரத்திற்கு நுரை பொங்கி வருவதாக கூறப்படுகிறது. குளங்கள் மற்றும் ஆற்றில் கழிவுநீரை கலப்பதினால், மழை நீருடன் சேர்ந்து, நுரை உருவாகியுள்ளது என்று செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ (ANI) தெரிவித்துள்ளது. நுரையாக மாறிய வைகை ஆற்றை பார்த்து மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

மதுரையில் (Madurai) குறிப்பிடத்தக்க வகையில், நேற்றிரவு பலத்த மழை பெய்தது, அதைத் தொடர்ந்து குளம் மற்றும் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்தது.

இதற்கிடையில், தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த அழுத்த பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக உருவாகும் என வானிலை மையம் கூறியுள்ளது. குறைந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து, டிசம்பர் 2 ஆம் தேதி தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைகளை அடைய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ALSO READ | திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கும் முன் விமானிக்கு ஏற்பட்ட ஹார்ட் அட்டாக்... !!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News