நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் சுற்றுப் பயணத்தை பிப்ரவரி 21 முதல் துவங்க உள்ளார். இந்த சுற்றுப் பயணமானது ராமநாதபுரத்தில் இருந்து துவங்க உள்ளது. தற்போது தனது அரசியல் பயணத்திற்கு நாளை நமதே என பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:-
கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்கக் கூடாது. சில பிரச்னைகளுக்கு தீர்வு சொல்ல முடியாது; செய்துதான் காட்ட முடியும். தியானத்தில் இருப்பது விஜயேந்திரரின் கடமை; எழுந்து நிற்பது எனது கடமை.
ஆன்மிக அரசியல் சாத்தியப்படுமா என எனக்கு தெரியவில்லை, மக்கள் நலன்தான் முக்கியம். கட்சி தொடங்கிய பிறகு நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்பு உள்ளாட்சி தேர்தல் குறித்து முடிவு எடுப்பேன்.
எதுவந்தாலும் எதிர்த்து அரசியல் செய்வேன். உடைப்பது வேலை அல்ல. கட்டுவதுதான் எனது வேலை. தேசிய அரசியலை விட தமிழக அரசியலுக்குத்தான் முக்கியத்துவம் தருவேன் நான்.
இவ்வாறு பேட்டி அளித்தார்.