TVMI: நடிகர் விஜயின் ரசிகர் சந்திப்பு; அரசியல் பிரவேசத்தின் டிரெய்லரா!?

தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தனது ரசிகர்களை நடிகர் விஜய் சந்தித்தார்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 27, 2021, 04:20 PM IST
  • நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்தின் டிரெய்லரா?
  • உள்ளாட்சி தேர்தல் வெற்றியாள ரசிகர்களை சந்தித்தார் தளபதி விஜய்
  • தளபதியின் வியூகம் என்ன?
TVMI: நடிகர் விஜயின் ரசிகர் சந்திப்பு; அரசியல் பிரவேசத்தின் டிரெய்லரா!? title=

சென்னை: தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தனது ரசிகர் மன்ற உறுப்பினர்கள் 129 பேரை தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் தமிழ் நடிகர் விஜய் சந்தித்தார். சி ஜோசப் விஜய் என்ற நடிகர் விஜயின் அரசியல் லட்சியத்தை இந்த சந்திப்பு தெளிவாக வெளிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 

நடிகர் விஜய் தேர்தலில் பிரச்சாரம் செய்யவில்லை, தேர்தல் குறித்த எந்தவொரு கருத்தும் கூட சொல்லாத நிலையில், அவரது ரசிகர் மன்ற உறுப்பினர்கள் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். அதுமட்டுமல்ல, ரசிகர் மன்றத்தின் கொடி மற்றும் நடிகர் விஜயின் படத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் விஜய் எந்தவொரு தடையையும் விதிக்கவில்லை.

தளபதி விஜய் மக்கள் இயக்கம் (Thalapathy Vijay Makkal Iyakkam(TVMI)) என்ற நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றம், அவரின் அரசியல் கட்சிக்கு முன்னோடியாக கருதப்படுகிறது. டி.வி.எம்.ஐ.யின் (TVMI) உறுப்பினர்கள் 169 பேர் தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களாக களம் இறங்கி, அதில் 129 பேர் வெற்றி பெற்றனர்.
TVMI உறுப்பினர்கள், நடிகர் விஜயின் வெளிப்படையான ஆதரவைப் பெறாமலேயே கணிசமான வெற்றியை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஜய், தனது ரசிகர்களை சந்தித்தது சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், விஜயின் பீஸ்ட் படக் குழுவும் இந்த புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளது.

நடிகர்களாக இருந்து அரசியல்வாதிகளாக அவதாரம் எடுத்த பிற கட்சியினரின், வேட்பாளர்களை விட, TVMI உறுப்பினர்கள் அதிக அளவு வெற்றி பெற்றுள்ளது நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் பற்றிய முன்னெடுப்பை முன்நிறுத்துவதாக உள்ளது. இதை கொடி மற்றும் நடிகரின் பெயரை மட்டும் பயன்படுத்த அனுமதி  கொடுத்ததுடன் ஒப்பிட்டு பார்க்கும் அரசியல் நிபுணர்கள், இது நடிகர், அரசியல்வாதியாக களம் இறங்குவதற்கான டிரெய்லர் என்று கூறுகின்றனர்.

நடிகராக இருந்து அரசியல்வாதிகள் மற்றும் சினிமா துறையில் பின்னணி உள்ளவர்கள் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டில், அரசியலின் அண்மை வரவாக நடிகர் விஜயும் தனது பிரபலத்தை பரிசோதிக்கும் களமாக உள்ளாட்சி தேர்தல்கள் பாரக்கப்படுகிறது.

Also Read | நீதிபதியின் கருத்துகள் புண்படுத்திவிட்டன - நடிகர் விஜய்

பல ஆளுமைகள் தங்கள் தனிப்பட்ட பிரபலத்தைப் பயன்படுத்தி அரசியலில் நுழைந்த பிறகு, கட்சியின் உள்கட்டமைப்பை ஏற்படுத்தியதற்கு மாறாக, விஜய் கட்சியின் உள்கட்டமைப்பை மீழ் மட்டத்தில் இருந்து கட்டியெழுப்ப முயற்சிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் விஜய், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தனது ரசிகர்களை சந்தித்தது தொடர்பாக TVMI அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களும் விஜயை சந்தித்து அவரது ஆசியைப் பெற்றதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் தளபதியை சந்தித்த ரசிக வெற்றியாளர்கள், மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சனைகளை விஜயிடம் எடுத்துரைத்ததாக நம்பப்படுகிறது. பொதுமக்களின் பிரச்சனைகள் தொடர்பாக, மாநில மற்றும் மத்திய அரசுகளின் ஆதரவுடன் அதற்கான தீர்வுகளைக் கண்டறிவது விஜய் படையின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இருக்கும்.
 
நடிகர் விஜய் மற்றும் ரசிக வெற்றியாளர்களுடனான சந்திப்பு குறித்து டி.வி.எம்.ஐ.யின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஜீ மீடியாவிடம் பேசினார். வெற்றி பெற்ற வேட்பாளர்களின் சான்றிதழ்களை பார்த்த தளபதி விஜய், மக்களின் நன்மைக்காக பணியாற்றுமாறு ஊராட்சி மன்ற உறுப்பினர்களை வலியுறுத்தினார். மேலும் அனைவரையும் தனித்தனியாக சந்தித்த நடிகர் விஜய், ஒவ்வொருவருடனும் ஓரிரு நிமிடங்கள் பேசியதாகவும் என்.ஆனந்த் தெரிவித்தார். விஜய் அரசியலுக்கு வர விரும்புகிறாரா என்ற கேள்விக்கு, இது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று சொன்ன ஆனந்த், இதை தளபதி விஜய் தான் சொல்லமுடியும் என்று பதிலளித்தார்.

Also Read | 15 இந்திய மொழிகளில் HOOTE செயலி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News