தமிழகத்தில் பயங்கர பரபரப்பு...நடிகை குஷ்பு திடீர் கைது!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு முட்டுக்காடு அருகே கைது செய்யப்பட்டிருக்கிறார்.

Last Updated : Oct 27, 2020, 08:49 AM IST
    • பாஜக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு முட்டுக்காடு அருகே கைது செய்யப்பட்டிருக்கிறார்.
    • நடிகை குஷ்பு கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜக கட்சியில் இணைதார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் சிதம்பரத்தில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
தமிழகத்தில் பயங்கர பரபரப்பு...நடிகை குஷ்பு திடீர் கைது!!

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் சிதம்பரத்தில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த போராட்டத்திற்க்கு தமிழக போலீசார் தடை விதித்து இருந்தனர். 

இந்த நிலையில், தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டு சென்ற நடிகை குஷ்புவை காவல்துறையினர் கைது செய்தனர். முட்டுக்காடு அருகே சுந்தரவதனம் எஸ்.பி தலைமையிலான போலீஸ், குஷ்புவை கைது செய்தது.

 

ALSO READ | நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு தெருவிலும் தாமரை மலர வேண்டும்!!

மனுதர்மம் தொடர்பான திருமாவளவனின் பேச்சை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணியினர் மாநிலமெங்கும் கண்டனம் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்கள். இதை கண்டித்து பாஜக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க குஷ்பு சென்று இருந்தார். மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் தலைமையிலான போலீசார் குஷ்புவை தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.

நடிகை குஷ்பு கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜக கட்சியில் இணைதார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ALSO READ | மகளிரை இழிவு செய்யும் மனுஸ்மிருதியைத் தடை செய்: விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News