எடப்பாடிக்கு வெற்றி
அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ. பன்னீர் செல்வம் முறையிட்டார். அதில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழுவையும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் அங்கீகரிக்கக்கூடாது என தெரிவித்தார். ஆனால், நீதிமன்ற தீர்ப்புகளும், தேர்தல் ஆணையத்தின் முடிவும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராகவே வந்தன.
தேர்தல் ஆணையம் அங்கீகாரம்
அண்மையில் நடைபெற்ற கர்நாடக தேர்தலிலும் அதிமுக சார்பில் போட்டியிட வேண்டும் என்பதால் தேர்தல் ஆணையம் பொதுச்செயலாளர் விவகாரத்தில் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பில் முறையிடப்பட்டன. அதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்து, இரட்டை இலை சின்னத்தையும் ஒதுக்கியது. இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாதகமாக பார்க்கப்பட்ட நிலையில், இப்போது எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று அதிமுக சட்ட விதிகளை அங்கீகரித்து இந்திய தேர்தல் ஆணையம் தனது வலை தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
ஓபிஎஸ் தரப்புக்கு வாய்ப்பு இல்லை
இது மற்றொரு ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகளை சுட்டிக்காட்டி, இறுதித் தீர்ப்பில் வெற்றி பெறுவோம் என்று கூறி வருகின்றனர். அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு இது கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஏற்கனவே வந்த நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அங்கீகரித்துவிட்டதால் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் தீர்ப்பும் தங்களுக்கு சாதகமாகவே வரும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் சிக்கலில் செந்தில் பாலாஜி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ