ஜெயலலிதா இந்து மதத்தை மட்டுமே சார்ந்தவரா...? அண்ணாமலை சர்ச்சைக்கு ஜெயகுமார் தடலாடி

Jayakumar Slams Annamalai: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை ஒற்றை மதவாத தலைவரை போல் சித்தரித்து அவதூறு பரப்புவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக கண்டனம் தெரவித்துள்ளது.  

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 25, 2024, 01:45 PM IST
  • ஜெயலலிதா மிகச்சிறந்த ஹிந்துத்துவா தலைவர் - அண்ணாமலை
  • அவரது இடத்தை பாஜக நிரப்பி வருகிறது - அண்ணாமலை
  • அண்ணாமலை பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
ஜெயலலிதா இந்து மதத்தை மட்டுமே சார்ந்தவரா...? அண்ணாமலை சர்ச்சைக்கு ஜெயகுமார் தடலாடி title=

Jayakumar Slams Annamalai On Jayalalitha Hindutuva Leader Controversy: ஜாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் ஆன தலைவராக திகழ்ந்த ஜெயலலிதாவை ஒற்றை மதவாத தலைவரை போல் சித்தரித்து அவதூறு பரப்பும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அதிமுகவின் அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அமைதி பூங்காவாக திகழ்ந்த தமிழ்நாடு

ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்,"முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட மற்ற மதங்களுக்குப் பொதுவாகத் திகழ்ந்தவர். அனைத்து மதத்தினரையும் சமமாக மதித்தவர். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நாட்டில் பல மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றது. தமிழ்நாட்டில் எந்தவித வன்முறைக்கும் இடம் அளிக்காமல் தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக திகழச் செய்தவர், ஜெயலலிதா ஆவார். 

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று, ஜெயலலிதா மீது அவதூறு பரப்பும் நோக்கில், ஒற்றை மதவாதத்தைச் சார்ந்த தலைவர் போல பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மேலும் படிக்க | கமலாலயத்தை முற்றுகையிட வரும் காங்கிரஸ்க்கு உணவு தயாராக இருக்கும்: எல். முருகன்

இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

புரட்சித்தலைவர் வழியில், "எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்- இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்ற திராவிடக் கோட்பாட்டின் அடிப்படையில் பொற்கால ஆட்சி தந்தவர் ஜெயலலிதா. அவர் தமது ஆட்சிக் காலத்தில் முதன்முதலாக திருக்கோயில்களில் அன்னதானத் திட்டத்தை துவக்கி வைத்தார். புனித ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி வழங்கும் திட்டம் 2001ம் ஆண்டு ஜெயலலிதாவின் ஆட்சியில் தொடங்கப்பட்டது.

புதிதாக வக்ஃபு நிறுவன மேம்பாட்டு நிதி உருவாக்கப்பட்டு, 3 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது. வக்ஃபு வாரியத்திற்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியம் ஜெயலலிதாவால் 1 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.
அவர் தமது ஆட்சிக் காலத்தில்தான் கிறிஸ்தவர்கள் அவர்களின் புனித ஸ்தலமான ஜெருசலம் சென்று வருவதற்கு, அரசு நிதி உதவி அளிக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

'அரசியல் லாபம்'

அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களை பாதுகாப்பதிலும், அவர்களின் நம்பிக்கைகளை மதித்துப் போற்றுவதிலும், எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி உறுதியாக இருந்தவர் ஜெயலலிதா. தமிழ்நாடு அரசியல் உள்ளவரை அனைத்து மக்களுக்கும் பொதுவான தலைவராம் ஜெயலலிதாவின் நெடும்புகழ் அவ்வண்ணமே நிலைத்து நிற்கும்.

அண்ணாமலை தனது சொந்த அரசியல் லாபத்திற்காகவும், தமிழ்நாட்டில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் ஜெயலலிதா இந்து மதத்தை மட்டுமே சார்ந்தவர் என்று, அவரது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் வேண்டுமென்றே பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்திற்குரியது" என குறிப்பிட்டுள்ளார். 

ஜெயலலிதா சிறந்த இந்துத்துவா தலைவர் என அண்ணாமலை சமீபத்தில் பேசியிருந்தார். அதாவது, தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகச்சிறந்த ஹிந்துத்துவா தலைவராக விளங்கினார் என்றும் அவருடைய இடத்தை பாஜக நிரப்பி வருகிறது என்றும் அண்ணாமலை பேசியிருந்தது சர்ச்சை ஆனது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில், அதிமுக தற்போது இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது  

மேலும் படிக்க | சென்னை : இரவு பார்ட்டிக்கு அழைத்த பெண் அழகி... ஆசையாக சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News