தாம்பரம் விமான படையில் பணியாற்றிய ஏர்மேன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Last Updated : May 4, 2017, 01:20 PM IST
தாம்பரம் விமான படையில் பணியாற்றிய ஏர்மேன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை title=

சென்னை தாம்பரத்தில் விமான படையில் பணியாற்றி வந்த சபீர் சிங் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். சபீர் சிங் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை தளத்தில் ஏர்மேனாக சபீர் சிங் பணியாற்றி வந்தார். சபீர் சிங் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். வழக்கம்போல நேற்றிரவு சபீர்சிங் பணிக்குச் சென்றுள்ளார். ரோந்துப்பணியின்போது, தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவல் அறிந்து, சேலையூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சபீர்சிங் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Trending News