திமுக எம்எல்ஏக்கள் சென்னை வர திடீர் உத்தரவு!

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று மாலைக்குள் சென்னை வர வேண்டும் என்று திமுகவின் கொறடா சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார்.

Last Updated : Feb 15, 2017, 10:43 AM IST
திமுக எம்எல்ஏக்கள் சென்னை வர திடீர் உத்தரவு! title=

சென்னை: திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று மாலைக்குள் சென்னை வர வேண்டும் என்று திமுகவின் கொறடா சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் குழப்பமான அரசியல் சூழல் தற்போது நிலவி வருகிறது. இந்நிலையில், திமுக எம்.எல்.ஏக்கள் அனைவருமே இன்று மாலைக்குள் சென்னை வருமாறு கட்சி கொறடா சக்ரபாணி வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார். 

ஆளும் அதிமுக கட்சி இரண்டாக பிளவுற்று சசிகலா அணி, பன்னீர் செல்வம் அணி என்று பிரிந்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை கிடைத்துள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரும் ஆளுநரை சந்தித்துள்ளனர். தற்போது ஆளுநர் யாரை ஆட்சி அமைக்க அழைப்பார் என்ற குழப்பான சூழல் நிலவும் நேரத்தில் திமுக கொறடா சக்கரபாணி அனைத்து திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சென்னை வருமாறு அழைத்துள்ளார்.

பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை ஆளுநர் வழங்கவுள்ள நிலையில் திமுக எம்எல்ஏக்களின் அழைப்பு முக்கிய அரசியல் நிகழ்வாக கருதப்படுகிறது.

Trending News