தமிழக அரசுக்கு எதிராகவும், விரோதமாகவும் செயல்பட்டு வரும் 18 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் பல வாய்தாக்கலுக்கு பின்னர் இன்று மீண்டும் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப் பட்டுள்ளது!
கரூரில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை சோதனை நடத்தி வருகிறது.
தினகரன் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி கரூரில் 8 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோதனை நடைபெறும் இடங்கள் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகள் ஆகும். ராமகிருஷ்ணா நகர், தான்தோன்றிமலை உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
எம்.எல்.ஏ. கூட்டத்தை கூட்டம் நிலையில் தனக்கு பதவி வேண்டாம் என்று எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.19 எம்.எல்.ஏ.கள் பிரிந்து சென்ற நிலையில் தினகரனுக்கு ஆதரவு எண்ணிக்கை கூட்டியுள்ளது என்றும் எங்களுக்கு எடப்பாடி அணியிலேயே சாதகமான உறுப்பினர்கள் இருப்பாதாகவும் தெரிவித்துள்ளார்.
தங்களை ஸ்லிப்பர் செல்களை கொண்டு மிரட்டுவதால் எங்களுக்கு எம்எல்ஏ பதவியே வேண்டாம் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு தங்கள் ஆதரவு தெரிவிக்க போவது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக எம்.எல்.ஏக்களின் ஊதியத்தை ரூ1.05 லட்சமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உயர்த்தி உள்ளார்.
தமிழக எம்எல்ஏ-க்கள் தங்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிவந்தனர். இந்நிலையில் தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது.
இதைதொடர்ந்து தமிழக எம்எல்ஏ-க்களின் ஊதியம் ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார். மேலும் தொகுதி மேம்பாட்டு நிதியும் ரூ. 2.5 கோடியாக உயர்த்தி வழங்கப்படுகிறது என்றும் அவர் அறிவித்தார்.
சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிந்ததும் இன்று மாலை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.
அதிமுகவின் பல்வேறு நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் தினகரனை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், தோப்பு வெங்கடாச்சலம் உள்ளிட்ட 34 எம்எல்ஏக்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தென்காசி தொகுதி எம்.பி., வசந்தி முருகேசனும் நேற்று காலை தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ-க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
நேற்று மாலை தி.மு.க. தலைமை அலுவலகத்திலிருந்து, உடனடியாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இன்று சென்னை வர வேண்டும். ஆலோசனை கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் மு.க ஸ்டாலின், திமுக எம்எல்ஏ-க்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கூர்ந்து கவனிக்க படுகிறது.
தம்பிதுரை மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது எம்எல்ஏ செந்தில்பாலாஜி புகார் தெரிவித்துள்ளார்.
கரூரில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்க, போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் தடையாக இருப்பதாக, செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கரூர் ஆய்வாளருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் கூறியதாவது,
கடந்த ஆண்டு மார்ச் மாதம், கரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். மேலும், 229.46 கோடி ரூபாய் மருத்துவமனை கட்டுமானப் பணிக்காக ஒதுக்கப்பட்டது.
தனது ஆதரவு எம்எல்ஏ-க்களை சசிகலா சிய இடத்தில் வைத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாகவும் கூறி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். சசிகலா தலைமையில் இன்று அதிமுக எம்எல்ஏ தலைமை கூட்டம் கூடியது. அப்பொழுது பெருவாரியான எம்எல்ஏ-க்கள் சசிகலாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
சசிகலா மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏ இன்றிரவு டெல்லி சென்று ஜனாதிபதி அவர்களை சந்திப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்க ஒப்புதல் கடிதம் பெறுவதற்காகவே கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்க ஒப்புதல் கடிதம் பெறுவதற்காகவே கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆதாயம் தரும் பதவி வகிப்பதால் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 27 பேரையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என கோரி புதிய மனு ஒன்று, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டு ள்ளது.
27 ஆம் ஆத்மி எம்எல்ஏ- க்கள் ஆதாயம் தரும் பதவிகளை வகிப்பதாக அவர்களுக்கு எதிராக ஜூன் மாதம் ஜனாதிபதியிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு கடந்த மாதம் ஜனாதி பதி மாளிகை மூலம் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.