Viral Poster in Tamil Nadu: தமிழகம் முழுவதும் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேவை, திருமணத்திற்கு பெண் தேவை என்ற கேப்ஷனுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் மதுரையில் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி போட்டியிட வேண்டுமென வலியுறுத்தி மதுரை முழுவதும் அவரது ஆதரவாளர் போஸ்டர்
கோவை மாநகர பகுதியில் பொது இடங்களில் சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் தொடர்ந்து ஒட்டபடுவதால் தற்போது மாநகரத்தில் போஸ்டர் ஒட்டுவதற்கு மாநகராட்சி ஆணையர் தடை விதித்துள்ளார்.
நடிகை அமலாபால் தனது விவாகரத்துக்குப் பிறகு வீறு கொண்டு எழுந்து நிற்கும் அமலா பால், சினிமாவில் விட்ட இடத்தைப் பிடிப்பதற்காக நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறார். அவர் இப்போது, 'அதோ அந்தப் பறவை போல' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘மெர்சல்’. இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சி வாங்கியுள்ளது!
பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வரும் தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக ’மெர்சல்’ வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையினை கைப்பற்ற மூன்று முன்னணி தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்குள் பலத்த போட்டி நிலவியது.
இப்படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 10.45 மணிக்கு இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிடுகிறார்.
கிரியேட்டிவ் சினிமாஸ் NY மற்றும் NJ எண்டர்டெயின்மென்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷுடன் இணைவது மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் ஷாலினி பாண்டே. இப்படத்திற்கு 100% காதல் பெயரிடப்பட்டுள்ளது. எம்.எம்.சந்திரமெளலி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். லண்டனில் இப்படத்தின் பெரும்பகுதி காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’’. இப்படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நைனிகாவும் நடித்து உள்ளார். முக்கிய வேடத்தில் நிகிஷா பட்டேலும் நடித்திருக்கிறார்.
இந்தப் படம் மலையாளத்தில் மெகா ஸ்டார் மம்மூட்டி படத்தின் ரீமேக்காகும். அரவிந்த்சாமி சம்மந்தப்பட்ட காட்சிகளை முடித்துள்ளார் இயக்குநர் சித்திக். இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் மீதமுள்ளது.
அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’’. இப்படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமான நைனிகா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் நிகிஷா பட்டேலும் நடித்திருக்கிறார்.
இந்தப் படம் மலையாளத்தில் மெகா ஸ்டார் மம்மூட்டி படத்தின் ரீமேக்காகும். அரவிந்த்சாமி சம்மந்தப்பட்ட காட்சிகளை முடித்துள்ளார் இயக்குநர் சித்திக். இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் மீதமுள்ளது.
சாக்லேட் ஹீரோ ஜூவாவின் நடிப்பில் உருவாகி வரும் படம் கீ, இபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது பற்றி ட்விட்டரில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
ஜீவா மற்றும் நிக்கி கல்ராணி நடிக்கும் படம் கீ. அறிமுக இயக்குனர் காலீஸ் இயக்குகிறார். இப்படத்திணை சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இப்படத்தின் போஸ்டரை சிம்பு வெளியிட்டார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 61 படத்துக்கு ‘மெர்சல்’ என்று பெயர் வைக்கப்பட்டு, படத்தின் இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இரண்டுமே மிகுந்த வரவேற்பை பெற்றன.
இந்நிலையில், விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
விரைவில் மூன்றாவது போஸ்டர் குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.