தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு

தீபாவளி பண்டிகை தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 2, 2021, 06:37 AM IST
தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு title=

தீபாவளி என்றாலே பட்டாசு, பலகாரம், புத்தாடைதான். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பண்டிகை களையிழந்தது. இந்த ஆண்டு மூன்கூட்டிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் ஆர்வமுடன் புத்தாடைகளையும் பட்டாசு, பலகாரங்களையும் வாங்க ஆரம்பித்து விட்டனர்.

மேலும் தீபாவளி (வியாழக்கிழமை) பண்டிகையை (Diwali 2021) முன்னிட்டு சென்னை பெருநகரில் குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னையில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1 முதல் 4 ஆம் தேதி வரை 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

ALSO READ | தீபாவளிக்கு மறுநாளும் அரசு  விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

இதற்கிடையில் தீபாவளி திருநாள் அன்று அதிக அளவில் பட்டாசு வெடிப்பதால் வாழ்வாதாரங்கள் பெருமளவில் மாசுபடுகின்றன. இதன் காரணமாக பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது., கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக அரசு கூறி உள்ளது. 

அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே தமிழகத்தில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அறிவித்துள்ளது. அத்துடன் பட்டாசு வெடிப்பதற்கான நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

ALSO READ | தீபாவளி அன்று இறைச்சிக் கடைகள் திறக்க தடையில்லை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News