சென்னையில் நவம்பர் 4ம் தேதி இறைச்சிக் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது தீபாவளி அன்று இறைச்சிக் கடைகள் இயங்க தடை எல்லை என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக தீபாவளி (Diwali) தினத்தன்று, அதிகளவில் இறைச்சி வாங்குது வாடிக்கையாக இருந்து வருகிறது. அதன்படி நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி தினத்தன்று இறைச்சி கடைகளை (Meat Shop) மூட சென்னை மாநகராட்சியின் சில மண்டல அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதற்கு, பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.
ALSO READ | Diwali Gift: ₹1,500க்கும் குறைவான விலையில், அசத்தலான தீபாவளி பரிசுகள்
இந்நிலையில், மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியதை தொடர்ந்து, தற்போது தீபாவளி தினத்தன்று இறைச்சி கடைகள் திறக்க சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது.,
இந்த ஆண்டு வரும் நவம்பர் 4 ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள அதே நாளில் மகாவீர் ஜெயந்தி நாளும் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மகாவீர் ஜெயந்தி நாளன்று இறைச்சிக் கடைகள் மூடப் படக்கூடிய நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது பொதுமக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டும் தீபாவளி நாளன்று இறைச்சி கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறன்றன.
மேலும் ஜெயின் மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளிலுள்ள இறைச்சிக் கடைகளும், ஜெயின் மத வழிபாட்டு தலங்களைச் சுற்றியுள்ள உள்ள இறைச்சிக் கடைகள் மூடப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வரும் நவம்பர் 4ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி, பாதுகாப்பை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மாநில பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ALSO READ| பட்டாசு வெடிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR