அரியலூர் : காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோயிலில் அபூர்வம்! லிங்கத்தின் மீது விழுந்த சூரிய ஒளி

Ariyalur Karaikurichi Pasupatheeswarar Temple : அரியலூர், காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ காட்சி நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து இக்காட்சியை பக்தர்கள் பரவசத்துடன் பார்த்து வழிபட்டனர். 

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 21, 2024, 02:54 PM IST
  • அரியலூர் சிவன் கோவிலில் நடந்த அதிசயம்
  • சூரிய ஒளி நேராக சிவலிங்கம் மீது விழுந்தது
  • பக்தர்கள் ஏராளமானோர் வரிசையாக வழிபாடு
அரியலூர் : காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோயிலில் அபூர்வம்! லிங்கத்தின் மீது விழுந்த சூரிய ஒளி title=

Ariyalur Karaikurichi Pasupatheeswarar Temple : அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகே கொள்ளிடம் ஆறு பாயும் காவிரிகரை ஓரத்தில் உள்ளது காரைக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள பசுபதீஸ்வரரை சூரிய பகவான் வழிபட்டதாக நம்பப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு இருமுறை மூலவர் சன்னிதானத்துக்குள் சூரிய பகவானின் ஒளி நேரடியாக விழும் அபூர்வம் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 20 ஆம் தேதியில் இருந்து 25 ஆம் தேதி வரை லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும். 

இக்காலத்தில் தான் சிவனை சூரியன் வழிபட்டதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 21 ஆம் தேதியான இன்று காலை 6:10மணியில் இருந்து 6:20 மணி வரைக்கும் சூரிய உதயமானது. அப்போது சூரியனிலிருந்து வெளிப்படும்  பிரதிபலிக்கப்பட்ட ஒளிக்கதிரானது நேரிடையாக லிங்கத்தின் மீது பட்டு பொன்னொளியில் ஒளிர்ந்தது. இந்த நிகழ்வானது சுமார் 10 நிமிடம் வரை நீடித்தது.இந்த அரிய காட்சியை காண ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோவிலுக்கு வந்தனர். சூரிய பகவான் சிவனை வழிபடுவதை பக்தர்கள் கண்டுகளித்து வழிபட்டு சென்றனர். இந்த அரிய நிகழ்வானது இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே நிகழலாம் என பக்தர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | 'ஸ்டாலின் யாருனு தெரியாது... விஜய்யை தெரியும்' சென்னையில் மனு பாக்கர் சொன்ன பதில்!

இந்த கோயிலின் சிறப்பு

கோயிலின் இருபுறமும் அமைந்துள்ள விநாயகர், கஜலட்சுமி சன்னதிகளிலும் சூரிய ஒளிபடும் என்பது மற்றொரு சிறப்பாகும். கோயிலின் தல விருட்சமாக வில்வமரம் உள்ளது. தென்புறத்தில் தட்சிணாமூர்த்தியும், வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர். துர்க்கை, சண்டிகேசுவரர், விஷ்ணு, லட்சுமி ஆகியோர் காட்சி தருகிறார்கள். 

சூரிய தோஷம் விலக்கும் பசுபதீஸ்வரர்

நவக்கிரகங்கள் இருந்தாலும் சூரிய பகவானும், சனீஸ்வரனும் தனித்தனியாக நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றனர். ஜாதகத்தில் சூரிய தோஷம் உள்ளவர்கள் இந்த தலத்திற்கு வந்து ஈஸ்வரனை வழிபட்டால் சூரிய தோஷம் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரஜினி பட இயக்குநரின் மனைவிக்கு தொடர்பு...? - பரபரப்பு தகவல்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News