திருநெல்வேலி மாநகர் மணி மூர்த்தீஸ்வரர் பகுதியில் கடந்த 30ஆம் தேதி மாலை வேலையில் பகுதியைச் சேர்ந்த மனோஜ் மற்றும் மாரியப்பன் ஆகிய இரண்டு இளைஞர்களும் குளிக்க சென்றுள்ளனர். குளித்துவிட்டு வீடு திரும்பியபோது அப்பகுதியில் மது அருந்தி கஞ்சா போதையில் இருந்த கும்பல் ஒன்று இரண்டு இளைஞர்களையும் வழிமறித்து தாக்கியுள்ளது. அத்தோடு அவர்களின் ஜாதியை கேட்டவுடன் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் என்று தெரிந்ததும் இரண்டு பேரையும் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாக்கி உள்ளது. கையில் வைத்திருந்த வால் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதுடன் இரண்டு பேரையும் நிர்வாணப்படுத்தி அவர்கள் மீது சிறுநீர் கழித்து இருக்கிறது.
மேலும் படிக்க| ஆளுநரால் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கும் அமைச்சர் பொன்முடி - பின்னணி என்ன?
மாலை வேளையில் இரண்டு பேரையும் பிடித்த அந்த கும்பல் நள்ளிரவு வரை அவர்கள் இரண்டு பேரையும் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாக்கி உள்ளது. இதனால் படுகாயம் அடைந்த இரண்டு இளைஞர்களிடமும் பணம் கேட்டு மிரட்டியதுடன், அவர்கள் இரண்டு பேரின் செல்போனையும் பறிமுதல் செய்து அத்தோடு ஐந்தாயிரம் ரூபாயையும் ஏடிஎம் கார்டை கொண்டு அவர்களிடமிருந்து பறிமுதல் செய்திருக்கிறது. இதனை அடுத்து ஒரு கட்டத்தில் இரண்டு இளைஞர்களும் அந்த கும்பலிடம் இருந்து நிர்வாணமாக தப்பித்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். அப்போது இளைஞர்களுக்கு நேர்ந்த கொடூரத்தை அறிந்த உறவினர்கள் மற்றும் பெற்றார் அதிர்ச்சியடைந்ததுடன் உடனடியாக படுகாயம் அடைந்த இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த தகவல் அறிந்த தச்சநல்லூர் காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விரிவான விசாரணை மேற்கொண்டனர். அதில் ஆறு பேரை கைது செய்துள்ளனர். கொடுங்காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களால் தாக்கி காயம் ஏற்படுத்துதல், வழிபறியில் ஈடுபடுதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போதையில் இருந்த கும்பலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். எனினும் தென் மாவட்டங்களில் நடைபெறும் தொடர் ஜாதிய வன்முறை நிகழ்வுகளின் ஒரு அங்கமாக பட்டியலின இளைஞர்கள் இரண்டு பேர் நிர்வாணப்படுத்தப்பட்டு சிறுநீர் கழிக்கப்பட்டு அவமரியாதைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்விற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க | 8 நிறுவனங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ