சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கருப்பையா என்பவர் தனியாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான காலி இடம் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் உள்ளது. அந்த இடம் பிரச்சினையில் இருந்ததால் தெரிந்த நண்பர்களிடத்தில் எல்லாம் கூறியிருக்கிறார். அப்போதுதான், கருப்பையாவுக்கு உதவுவதாக கோவை செல்வபுரத்தை சேர்ந்த ஜோதிடரும், இந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவு துணை தலைவருமான பிரசன்னா என்பவரும் முன்வந்துள்ளார்.
மேலும் படிக்க | ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழந்த பட்டதாரி வாலிபர் சுரேஷ் தற்கொலை...
இதையடுத்து, பிரச்சன்னாவை நம்பி 25 லட்சத்து 59 ஆயிரத்து 200 ரூபாயை கருப்பையாக கொடுத்ததாக தெரிகிறது. அதை வாங்கிக்கொண்ட ஜோதிடர் பிரசன்னா, மேலும் மாங்கல்ய பூஜை செய்ய வேண்டும் என்று கூறி கருப்பையாவிடம் சொல்லியியுள்ளார். இதையடுத்து, கருப்பையா மனைவியின் 15 சவரன் தாலி சங்கிலியையும் பிரசன்னா வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் ஊரப்பாக்கம் இடப் பிரச்சினை மட்டும் தீர்ந்தபாடில்லை. கருப்பையாவுக்கு மெல்ல மெல்ல பிரசன்னா மீது சந்தேகம் வந்துள்ளது.
உடனடியாக போலீஸாரிடம் கருப்பையாக புகார் அளித்தார். அதன் அடிப்படையில், ஜோதிடர் பிரசன்னா, அவரது மனைவி அஸ்வினி, ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத் மற்றும் பிரகாஷ் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் பிரசன்னா ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை. மோசடி புகாரால் மிகுந்த மனவேதனை அடைந்த பிரசன்னா விபரீத முடிவு ஒன்றை எடுத்தார். கடந்த 3ம் தேதி உக்கடம் பைபாஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பிரசன்னா, அவரது மனைவி அஸ்வினி, தாய் கிருஷ்ணகுமாரி, மகள் ஆகியோர் விஷம் குடித்தனர். தற்கொலை முயற்சிக்கு முன்பு அவர்கள் வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டனர். அதில், தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை எனவும், போலியாக மோசடி புகார் கூறி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
விஷம் குடித்த மயங்கிய நிலையில் கிடந்த பிரசன்னாவின் குடும்பத்தைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், 4 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரசன்னசாமியின் தாய் கிருஷ்ணகுமாரி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து பிரசன்னசாமி, அவரது மனைவி அஸ்வினி அவர்களது மகள் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பிரசன்னா உயிரிழந்தார்.
உயிரிழப்பதற்கு முன்னதாக, ஜோதிடர் பிரசன்னா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், சென்னையை சேர்ந்த கருப்பையா, அவரது மனைவி ரதிபிரியா மற்றும் சங்கர் ஆகியோர் வேண்டுமென்றே தன் மீது மோசடி புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, தற்கொலைக்கு துண்டியதாக சென்னையைச் சேர்ந்த கருப்பையா குடும்பத்தினர் மீது செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | மகனின் பிணத்துடன் மூன்று நாட்களாக வாழ்ந்த தாய் !
இருதரப்பிலும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்திருப்பதால் இந்த விவகாரத்தில் உண்மை நிலவரம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது காவல்துறை!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ