தமிழக அமைச்சர் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் சந்திப்பு!

சென்னை தலைமை செயலகத்துக்கு வருகை தந்த இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் ஹரிந்தர் சித்து, அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து பேசினார். 

Updated: Jun 12, 2019, 08:36 PM IST
தமிழக அமைச்சர் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் சந்திப்பு!
Pic Courtesy: twitter/@Vijayabaskarofl

சென்னை தலைமை செயலகத்துக்கு வருகை தந்த இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் ஹரிந்தர் சித்து, அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து பேசினார். 

ஆஸ்திரேலியாவின் தேசிய  விபத்து சிகிச்சை ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை திட்டத்தின் (TAEI) செயல்பாடுகள் குறித்து இச்சந்திப்பின் போது கலந்தாலோசிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது குடும்ப நலத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், சென்னையிலுள்ள ஆஸ்திரேலியா தூதரக அதிகாரி  சூசன் கிரேஸ், துணை தூதரக அதிகாரி மைக்கேல் கோஸ்டா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்தியாவின் ஆட்சிமுறைகளை குறித்து தொடர்ந்து நன்கருத்துகளை வெளியிட்டு வரும் இந்தியாவிற்கான ஆஸ்திரேலியா தூதர் ஹரிந்தர் சித்து, இன்று சென்னை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் குறித்து தனது கருத்தினை பதிவு செய்த ஹரிந்தர் சித்து தெரிவிக்கையில்., இந்திய வாக்குசாவடிகள் என்னை வியப்படைக்க வைக்கின்றன. இத்தனை வாக்காளர்களை இங்கு வரவழைப்பது எவ்வளவு கடினமான விஷயம் எனபது எனக்கு புரிகிறது. இந்த கடினமான இலக்கை இந்திய தேர்தல் ஆணையம் திறம்பட செய்து வருகின்றது என தெரிவித்தார்.

இந்தியாவில் நடைபெறும் தேர்தல் தன்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது என தெரிவித்த அவர், இங்குள்ள மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

மேலும் தேர்தல் ஆணையமும், தேர்தல் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் தான் தேர்தல் அமைதியாக நடைப்பெற்று வருகிறது என்று தெளிவுப்பட தெரிகிறது. மக்கள் தாங்கள் பதிவு செய்த வாக்கை ஒப்புகை சீட்டு முறை மூலம் சரிபார்த்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதும் பாராட்டக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.