Chennai Commissioner Changes Latest News Update: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங்கை சென்னை பெரம்பூரில் மக்கள் நடமாட்டும் அதிகம் இருக்கும் நேரத்தில் பொது சாலையில் வைத்து ஒரு கும்பல் வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுவதுமே இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரான மாயாவதி, ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த போது, பிடிபட்டவர்கள் உண்மையான குற்றவாளி இல்லை என்கிறார், தமிழ்நாட்டில சட்டம் ஒழுங்கு சரியில்லை என்கிறார். ராகுல் காந்தி ஆம்ஸ்ட்ராங்கிற்கு இரங்கல் தெரிவித்திருந்தார். இப்படி தேசிய அளவில் கவனம் பெற்ற இந்த கொலை சம்பவத்தால் பலரும் தமிழ்நாடு அரசு மீது குற்றஞ்சாற்றினர்.
அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசை இந்த விஷயத்தில் கடுமையாக எதிர்த்த நிலையில் கூட்டணி கட்சியான விசிக இந்த கொலை சம்பவத்தை செய்த உண்மையான நபர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறார். இப்படி தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் கொலை சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கி வந்தது.
குறிப்பாக, ஆம்ஸ்ட்ராங்கின் கொலை அரசியல் பின்னணி கொண்டதாக இருக்கலாம் என சந்தேகம் கிளம்பியது. ஆனால் இதற்கு தக்க ஆதாரம் ஏதும் இல்லை என்றும் முதற்கட்ட விசாரணையின்படி ரவுடி ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்குப் பழி சம்பவமாக இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதாக சென்னை கமிஷனர் சந்தீர் ராய் ரத்தோர் நேற்று முன்தினம் இரவு தெரிவித்திருந்தார். மேலும் இந்த கொலையில் தென் மாவட்டங்களைச் சேர்ந்தோர் யாரும் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங் கொலை பழிக்குப் பழி சம்பவமா...? பின்னணி என்ன? - வெளியான பரபரப்பு தகவல்கள்
மூன்று முக்கிய மாற்றங்கள்
இந்நிலையில், சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய சென்னை காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டுள்ளார். அருண் சென்னை சட்ட ஒழுங்கு பிரிவு ஏடிஜிபியாக இருந்தார். தற்போது சந்தீப் ராய் ரத்தோருக்கு போலீஸ் கல்லூரியின் டிஜிபியாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், டேவிட்சன் தேவாசிர்வாதம் தற்போது சென்னை சட்ட ஒழுங்கு ஏடிஜிபியாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிகரித்த அழுத்தம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், கைதான 11 பேரிடமும் அவர் தலைமையிலேயே விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த விவகாரத்தில் கொலை நடந்த சம்பவ இடத்திற்கு சென்னை கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர் செல்லவில்லை என அதிகம் பேசப்பட்டது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலேயே சட்ட ஒழுங்கு மிக மோசமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வந்தனர்.
இதுமட்டுமின்றி, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம், சேலத்தில் அதிமுக பிரமுகர் கொலை, கடலூரில் முன்னாள் பாமக நிர்வாகி மீது தாக்குதல் என சமீப நாள்களில் தொடர் குற்றச்சம்பவங்கள் திமுக அரசுக்கு அழுத்தத்தை அதிகரித்தது. நெல்லை காங்கிரஸ் தலைவர் கொலையும் கூட பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சூழலில்தான் தலைநகர் சென்னையின் கமிஷனராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங் படுகொலை: 'அரசியல் பின்னணி இல்லை' - போலீசார் சொல்வது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ