நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வாழவந்திநாடு செங்காட்டுபட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (45) விவசாயி. இவரது மகன் ராஜ்குமார். கடந்த சில வருடங்களுக்கு முன் முதல் மனைவி இறந்து விடவே செல்வராஜ் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மனைவி பேபிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. முதல் மனைவி மூலம் பிறந்த மகனான ராஜ்குமாருக்கும் தந்தை செல்வராஜ்க்கும் இடையே சொத்து தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு செல்வராஜ் தனது இரண்டாவது மனைவி பேபியுடன் சேந்தமங்கலத்தில் இருந்து பொலிரோ பிக்கப் வாகனத்தில் கொல்லிமலை நோக்கி சென்றுள்ளார். காரவள்ளி அருகே சென்ற போது அவரது மகன் ராஜ்குமார் அடியாட்கள் 3 பேருடன் வந்து வாகனத்தின் கண்ணாடியை உடைத்து மறித்துள்ளனர்.
மேலும் படிக்க | தூத்துக்குடியில் அடுத்தடுத்து 23 சிறார்கள் - வெளியான அதிர்ச்சி பின்னணி !!
மேலும் வாகனத்தில் இருந்த செல்வராஜ் யை கல்லை கொண்டு கொடூரமாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் இருந்த செல்வராஜை மீட்டு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்ததில் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வாழவந்திநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தையை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய அவரது மகன் மற்றும் உடந்தையாக இருந்த நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சொத்துக்காக தந்தையை, மகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | தூக்கு மாட்டிக் கொள்ளும் வீடியோ பதிவு செய்து, 9ம் வகுப்பு மாணவன் தற்கொலை!
மேலும் படிக்க | ஆத்தூர் அருகே கோர விபத்து; 6 பேர் பலி, 5 பேர் படுகாயம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ