முதலமைச்சர் பழனிச்சாமி பதவியேற்றபின் நடைபெற இருக்கின்ற முதல் அனைத்துக்கட்சி கூட்டம் வருகின்ற 22-ம் தேதி (நாளை) நடைபெறும் நிலையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு விவசாயிகளை அழைக்க அரசு முடிவு செய்துள்ளது.
தொடர்ந்து வரும் காவிரி விவகாரத்தில் காவிரியில் தமிழகத்தின் பங்கு 14.75 டி.எம்.சி-யாக குறைக்கப்பட்ட நிலையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக வருகின்ற (நாளை) 22-ம் தேதி காலை 10.30 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளதை அடுத்து இந்த அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்கு விவசாயிகளையும் அழைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்த ஆலோசனை கூடமானது, முதலவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாடடவும், விவசாயிகளின் நலனை பாதுக்காக்கவும் இந்த கூட்டத்தில் அரசு உறுதியளிக்கும் என்று கருதுகின்றனர்.
காவிரி தொடர்பாக நாளை நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு விவசாயிகளையும் அழைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.