தமிழகத்தில் அமையவுள்ள மருத்துவ கல்லூரிக்கு முதல்கட்ட நிதி...

தமிழகத்தில் அமைய உள்ள 6 மருத்துவ கல்லூரிக்கு முதல் கட்டமாக ரூ.137 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

Last Updated : Dec 3, 2019, 04:37 PM IST
தமிழகத்தில் அமையவுள்ள மருத்துவ கல்லூரிக்கு முதல்கட்ட நிதி... title=
தமிழகத்தில் அமைய உள்ள 6 மருத்துவ கல்லூரிக்கு முதல் கட்டமாக ரூ.137 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
 
தமிழகத்துக்கு புதிதாக 9 மருத்துவ கல்லூரி கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த கல்லூரிகளுக்கு கட்டமைப்பு ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிதாக 4 அரசு மருத்துவ கல்லூரி அமைப்பதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் அமைய உள்ள 6 மருத்துவ கல்லூரிக்கு முதல் கட்டமாக 137 கோடி ரூபாயினை ஒதுக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
முன்னதாக, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஆயிரத்து 224 பேருக்கான பணி நியமனம் வழங்கப்படும் நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 
 
இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக சுகாதாரத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை முதல்வர் பார்வையிட்டார்.
 
இந்த நிகழ்ச்சியில் பேசிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மிக சிறப்பாக செயல்பட்டதற்காக மத்திய அரசின் தேசிய விருதை தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளாக பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில், 254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் 165 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 30 படுக்கை வசதி கொண்டவையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கப்படும் 9 மருத்துவ கல்லூரிகள் மூலம் 8 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது புதிதாக தமிழகத்தில் அமைய உள்ள 6 மருத்துவ கல்லூரிக்கு முதல் கட்டமாக ரூ.137 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது எனும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Trending News