மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தேசிய கொடியை ஏற்றினார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் கூறினார். நீட் தேர்வு என்பது மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தவே. அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வு ஏற்றுக்கொண்டு உள்ளன. ஆனால் தமிழகத்தில் சில அரசியல் தலைவர்கள் நீட் தேர்வை வைத்து அரசியல் செய்கின்றனர். மேலும் நீட் தேர்வைக்கு எதிராக பேசி, மாணவர்களை குழப்பவதொடும், அவர்களின் வாழ்க்கையையும் கேள்வி குறி ஆக்கின்றன். மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கும் விதமாக பேச அரசிற்கோ, அரசியல் கட்சிகளுக்கோ உரிமை கிடையாது. எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு மாணவர்களின் வாழ்க்கை கேள்வி குறி ஆக்க வேண்டாம் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Flag hoisted in my constituency Camp office and took Pledge #MynewIndia #SankalpSeSiddhi #IndependenceDayIndia pic.twitter.com/svPH5NMub0
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) August 15, 2017