எஃகு ஆலைகளை Oxygen தயாரிக்க மத்திய அரசு மறுஉருவாக்கம் செய்யுமா?

எஃகு ஆலைகளை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மறுஉருவாக்கம் செய்ய வேண்டும் என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 5, 2021, 03:02 PM IST
  • எஃகு ஆலைகளை Oxygen தயாரிக்க மத்திய அரசு மறுஉருவாக்கம் செய்யுமா?
  • கோயம்புத்தூரிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை
  • மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் தொலைபேசியில் வானதி சீனிவாசன் நேரடியாக பேசினார்
எஃகு ஆலைகளை Oxygen தயாரிக்க மத்திய அரசு மறுஉருவாக்கம் செய்யுமா? title=

கோவை: எஃகு ஆலைகளை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மறுஉருவாக்கம் செய்ய வேண்டும் என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் முடிந்து ஓரிரு நாட்களே ஆகிறது. கோவை தெற்குத் தொகுதியில் இருந்து பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வானதி சீனிவாசன் மத்திய அரசிடம் தமிழக நலனுக்காக வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். 

கோயம்புத்தூர் மாநகரம் எதிர்கொள்ளும் ஆக்சிஜன் பற்றாக்குறையை குறைப்பதற்கான முயற்சிகள் தொடர்பாக அகில இந்திய பாஜக மகிளா மோர்ச்சா தலைவர் வானதி சீனிவாசன் புதன்கிழமை (மே 5, 2021) அன்று தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Also Read | மாநிலங்களுக்கு இடையேயான பயணத்திற்கு RT-PCR தேவையில்லை

இது தொடர்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் தொலைபேசியில் தான் நேரடியாக பேசியதாக வானதி சீனிவாசன் கூறினார்.

ஆக்சிஜன் விவகாரம் குறித்து பேசிய மத்திய அமைச்சர், இந்த யோசனையை உடனடியாக பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார் என வானதி சீனிவாசன் தனது டிவிட்டர் செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ALSO READ |  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே 7ம் தேதி முதல்வராக பதவி ஏற்கிறார்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற  ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News