பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமுவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

2021ம் ஆண்டிற்கான உலகளாவிய உணவு, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா சாதனைகள் விருது நிகழ்ச்சியில், செஃப் தாமு என்று அழைக்கப்படும் பிரபல சமையல் வல்லுநர் கோதண்டராமன் தாமோதரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 1, 2021, 01:39 PM IST
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமுவுக்கு  வாழ்நாள் சாதனையாளர் விருது title=

2021 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய உணவு, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா சாதனைகள் விருது நிகழ்ச்சியில், செஃப் தாமு என்று அழைக்கப்படும் பிரபல சமையல் வல்லுநர் கோதண்டராமன் தாமோதரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.  மிகப்பெரிய சர்வதேச அங்கீகாரமாக, கருதப்படும் இந்த விருது நவம்பர் 5-ம் தேதி லண்டனில் நடைபெற உள்ள  விருது நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளது. கேட்டரிங் துறையில் அனுபவம் வாய்ந்த  ஒருவர் வாழ் சாதனைக்காக வழங்கப்படும் முதல் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்தின் உலகத் தமிழ் அமைப்பால்  வழங்கப்படும் இந்த விருது,  இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்படும். தாமு அவர்கள், உணவு வழங்கல் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள இந்தியாவில் பிரபலமான சமையல் கலைஞர் என்பதோடு,  விருந்தோம்பல் துறையில் அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகவும் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். 

இந்த விருதை பெறுவதற்கு பெருமிதம் கொள்வதாக கூறிய செஃப் தாமு, "என்னுடைய பல ஆண்டுகள் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இதை நான் பார்க்கிறேன். இந்த பிரிவில் முதல் விருதை பெறுவது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரிய தருணம் ஆகும்," என்று கூறினார். 

ALSO READ | கனமழை காரணமாக ஆறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

இந்த விருது இளம் சமையல் கலைஞர்களை ஊக்குவிக்கும் என்று கூறிய அவர்,  "கடின உழைப்பால் நீங்கள் எந்த உயரத்தையும் எட்டிவிட முடியும் என்பதை இது உணர்த்துகிறது. மற்றவர்களுக்கு உந்துதலாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்," என அவர் கூறினார். 

தற்போது அவர் தென்னிந்திய செஃப் அசோசியேஷன் தலைவராகவும் உலக சமையல் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ள செஃப் தாமு, நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளதோடு, 3 கின்னஸ் சாதனைகளையும் படைத்துள்ளார். சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான தாமுவை, இன்ஸ்டாகிராமில் 500,000 க்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.

இல்லத்தரசிகளுக்கு உதவும் வகையில், 26 புத்தகங்களும், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்களுக்கான சமையல் புத்தகங்களையும் எழுதியுள்ளார். ஒவ்வொரு நாளும் 1 கோடியே 60 லட்சம் குழந்தைகளுக்கு உணவளிக்கும் சத்துணவு திட்டத்தில் புதிய மெனு வகைகளை அறிமுகப்படுத்திய பெருமையும் தாமுவுக்கு உண்டு. இதற்காக 1.5 லட்சம் பெண் சமையல் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்தார். இத்திட்டம் தமிழகத்தில் பெரும் வெற்றி பெற்றுள்ளது.  

ALSO READ | தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு  ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News