சென்னை சென்ட்ரல் நிலைய பெயர் மாற்றம் குறித்து அரசாணை வெளியீடு!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை,  'புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம்' என்று பெயர் மாற்றி தமிழக அரசாணை!!

Last Updated : Apr 6, 2019, 10:02 AM IST
சென்னை சென்ட்ரல் நிலைய பெயர் மாற்றம் குறித்து அரசாணை வெளியீடு! title=

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை,  'புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம்' என்று பெயர் மாற்றி தமிழக அரசாணை!!

சென்னையின் மிகப்பழமையான ரயில் நிலையமாக கருதப்படும், சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு, எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என்று பிரதமர் மோடி முன்னரே அறிவித்திருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னை ரயில் நிலையத்தின் பெயரை டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என்று மாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த தீர்மானம் பிரதமர் நரேந்திர மோடிக்கு செப்டம்பர் 12 ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய சென்னை எம்.பி. எஸ்.ஆர் விஜயகுமாரும் 377-வது சட்டவிதியின்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆரின் பெயரை சூட்டும்படி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், தமிழகத்துக்கு கடந்த மாதம் 6-ம் தேதி வந்த பிரதமர் நரேந்திர மோடி, வண்டலூர் அருகே நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

அப்போது கூட்டத்தில் பேசிய மோடி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்று உறுதியளித்தார். இந்நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்வதற்கான அறிவிக்கையை அரசிதழில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று வெளியிட்டுள்ளார்.

அதில், பெயர் மாற்றம் செய்வதற்கு தடையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த மாதம் 9 ஆம் தேதி கடிதம் அனுப்பியுள்ளதாகவும், இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், 'Puratchi Thalaivar Dr. MGR Central Railway station' என்றும், தமிழில், 'புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம்'  என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

Trending News