சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று(திங்கட்கிழமை) சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் வாரந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது மாவட்ட ஆட்சியாளர் வெ. அன்புச்செல்வன் மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் தமிழக அரசு சார்பில் வரும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் திட்டம் சார்பாக, மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு மென்பொருளுடன் கூறிய கையடக்க கணினிகளை பத்து சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார்.