துபாயில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை வந்த பயணிகள் விமானத்தின் சக்கரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அதிஷ்டவசமாக அனைத்து பயணிகள் உயிர் தப்பினர்.
இன்று அதிகாலை துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்த விமானம் தரை இறங்கும்போது, எந்திரக் கோளாறு ஏற்பட்டது. விமானி, சாமர்த்தியமாக விமானத்தை ஓடுபாதையில் நிறுத்தி, 164 பயணிகளின் உயிரைக் காப்பாற்றினார்.
ஓடு தளத்தில் தரையிறங்கிய போது விமானத்தின் முன்பக்க சக்கரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டு சுழலாமல் நின்றது. இதனால் ஓடு தளத்தில் சக்கரம் உரசி புகை ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த விமானி சாமர்த்தியமாக விமானத்தை நிறுத்தினார்.
பின்னர்தான், விமானத்தின் சக்கரங்கள் சுழலவில்லை என்பது விமானிக்குத் தெரிந்தது. மேலும், பத்திரமாக விமானத்தை ஓடுப்பாதையிலேயே நிறுத்திவிட்டு, விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்துள்ளார். 164 பயணிகளும் பத்திரமாக இறக்கப்பட்டனர். விமானத்திலிருந்து ஏற்பட்ட பயங்கர சத்தத்தால், சிறிது நேரம் அங்கு பதற்றம் நிலவியது.
மேலும் அந்த விமானம் காலை 6.15 மணிக்கு மீண்டும் டெல்லிக்கு புறப்பட இருந்தது. இதை தொடர்ந்து கோளாறு சரி செய்யப்பட்டு சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.