கூலிப்படையின் தலைநகராக சென்னை மாறி உள்ளது - அண்ணாமலை குற்றச்சாட்டு

14 நாட்களில் தமிழகத்தில் 134 கொலைகள் நடைபெற்று உள்ளது. தமிழகம் தற்பொழுது  அபாயகரமான சூழலில் உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.

Written by - RK Spark | Last Updated : Jul 9, 2024, 08:06 PM IST
  • தமிழகத்தில் 134 கொலைகள் நடைபெற்று உள்ளது.
  • இது அபாயகரமான சூழலில் உள்ளது.
  • தமிழக அரசு இதை ஒத்துகொள்ள வேண்டும்.
கூலிப்படையின் தலைநகராக சென்னை மாறி உள்ளது - அண்ணாமலை குற்றச்சாட்டு title=

சென்னை பெரம்பூரில் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் அயானவரம் இல்லத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வந்து இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது, பகுஜன் சமாஜ் கட்சியில் 20 ஆண்டுகளாக மாநில தலைவராக இருந்தவர் இரண்டு நாட்களுக்கு முன்பாக நம்மை விட்டு பிரிந்துள்ளார். அவரது இல்லத்திற்கு அவருடைய குடும்பத்தாரை சந்தித்து கட்சியின் சார்பாக இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் இது போல் நடந்தது இல்லை ஒரு அரசியல்வாதி வாதி பகலில் அவர் கட்டிக் கொண்டிருக்கக் கூடிய வீட்டில் கூலி கடை தாக்குதலை அங்கேயே கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

மேலும் படிக்க - லேட் மேரேஜ் செய்யும் இளைஞர்களே கவனம்... பல ஆண்களுக்கு டுமிக்கி கொடுத்த பெண் - இன்னும் சிக்கல

தேசிய தலைவர் நட்டா மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் இது குறித்து கேட்டறியார். நாளை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தலைமையில் 11 மணி அளவில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது. பாஜக சார்பாக சிபிஐ விசாரணை கூறுகிறோம் இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு நாளை நடைபெற உள்ளது. தமிழக பாஜக சார்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி தெரிவிக்க உள்ளோம். தமிழகத்தில் தலித் மக்களுக்கு தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் அதேபோல ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் நியாயம் கிடைக்க வேண்டும் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்வோம். படுகொலைக்கு யார் காரணம் யார் பொருள் கொடுத்துள்ளார்கள்.

சென்னை கூலிப்படையில் தலைநகராக மாறி உள்ளது. பொதுமக்கள் உள்ளிட்ட யாருக்கும் உத்தரவாதம் இல்லாத சூழ்நிலைதான் சென்னையில் ஏற்பட்டிருக்கிறது முதலமைச்சர் இதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என தெரியவில்லை சென்னையில் இது போன்ற சம்பவம் நடைபெற்ற பிறக்கும் கூட முதலமைச்சர் வேகம் காட்ட வில்லை இன்னும் ஆமை வேகத்தில் தான் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு நடைபெற்று வருகிறது இப்ப அது முதலமைச்சர் விழித்துக் கொண்டு உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தின் கூலிப்படைத்து இடமில்லை என்று செய்தியை விரைவில் சொல்ல வேண்டும் நேற்று முன்தினம் கட்சியின் தலைவர்கள் தொண்டர்கள் எல்லோரும் சென்றார்கள் இலங்கையில் மூத்த தலைவர் சம்பந்தம் ஐயா அவர் இறந்ததன் காரணமாக அவர் இறுதி சடங்கு சென்று அதனால் கொழும்புக்கு சென்று அதை முடித்துவிட்டு இப்போதுதான் வந்துள்ளேன் நேரடியாக ஆம்ஸ்ட்ராங் இல்லத்தில் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினேன். 2024 ல் என்கவுண்டருக்கு என்கவுண்டர் என்ற முறை மாறிவிட்டது.

ஒரு நிகழ்வு நடப்பதற்கு முன்பு காவல்துறை செய்ய வேண்டிய வேலை என்ன என்பது தான். ரவுடிகளின் கண்காணிப்பு ஜெயிலில் இருந்து யார் வெளியே வருகிறார்கள் அதன் பிறகு அவர்கள் என்ன செய்கிறார்கள் என கண்காணிக்கவில்லை. காவல்துறையினர் பிரமலமான வழக்கிஞர்களை  தொடர்பு கொண்டு கொலை செய்த நபர்களை சரண்டர் ஆக சொல்லுங்கள் எனக் கூறும் நிலை தான் உள்ளது. இந்த சரண்டர் போது உள்ளே செல்பவர்கள் மீண்டும் வெளியே வந்து விடுவார்கள். காவல்துறையில் அடிப்படையில் இருந்து காவல்துறை கண்காணிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட பிறகு காவல்துறை மீது அழுத்தம் கொடுப்பது எப்படி என கூறினார். முன்னாள் ரவுடி என்ற முறையில் செல்வப்பெருந்தகை ஒரு நெட்வொர்க் இருக்கலாம். பாஜகவில் அப்படி பட்டவர்களுக்கு இடம் இல்லை.

திமுகவின் முதல் எதிரி பாஜக என தெரிவித்தார். வெட்டுபவர்களுக்கு ஏன் வெட்டுகிறோம் என கூட தெரியாது. அவர்களுக்கு அது ஒரு வேலை. இதற்கான மூளை யார். உளவுதுறை அவர் மீது கவனம் செலுத்தி இருக்கும். யார் வெட்ட சொன்னது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். மாயாவதி சொன்னது போல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. மாயாவதி சொன்னது போல் இந்த வழக்கு சிபிஐ விசாரணை வேண்டும். காவல்துறையிலும் கருப்பு ஆடுகள் உள்ளது.முதலமைச்சர் இந்த வழக்கை தாமாவே சிபிஐ க்கு கொடுக்க வேண்டும். காவல்துறையில் உள்ளவர்களுக்கு அழுத்தம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் தலித் மக்கள் மீதான கொலை சம்பவங்களும் வன்முறைகளும் அதிகரித்து இருக்கிறது. திமுகவின் கைபாவையாக சில காவல்துறை அதிகாரிகள் மாறிவிட்டனர். 14 நாட்களில் தமிழகத்தில் 134 கொலைகள் நடைபெற்று உள்ளது. இது அபாயகரமான சூழலில் உள்ளது. ஒரு நாட்களில் 7/8 என்ற அளவில் கொலை நடைபெறுகிறது. தமிழக அரசு இதை ஒத்துகொள்ள வேண்டும்.

மேலும் படிக்க - ரஞ்சித் குற்றச்சாட்டுக்கு திமுகவின் பதில்... ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News