சென்னை காசிமேடு பழைய அமராஜ்சி புரம் பகுதியைச் சேர்ந்தவர் மதன் (27). ஊர்க்காவல் படையில் பணியாற்றி வந்த நிலையில் பாடி பில்டராக இருந்தவர் ஒருமுறை ஆணழகன் மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்றுள்ளார். இந்நிலையில், மதன் அதே பகுதியைச் சேர்ந்த ஹேமலதா(25) என்பவரை ஐந்து மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி இருவரும் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஹேமலதா மதனை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கே சென்றிருக்கிறார்.
இதற்கிடையே, கணவரிடம் ஹேமலதா விவகாரத்து கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த மதன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். அப்போது ‘உனக்கு விவகாரத்து தருகிறேன், இனி என்னால் உன் படிப்பு எதுவும் பாதிக்காது, நீ சுதந்திரமாக இருக்கலாம். நான் கட்டிய தாலியை நீயே கழட்டி வைப்ப’என்று பேசி தனது காதல் மனைவிக்கு வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டார். பின்னர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் மதனை மீட்டு சென்னை இராயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் 4 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் படிக்க | மைலாப்பூர் இரட்டை கொலை - குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்..!
இதனைத் தொடர்ந்து உடலை வாங்குவதற்கு ஹேமலதா உறவினர்கள் மற்றும் மதனின் உறவினர்கள் என இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் மதனின் மனைவியிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் காசிமேடு நிலையம் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் சிறிது பரபரப்பு நிலவியது. பின்னர் இருதரப்பினரும் பேச்சு வார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர். இதனையடுத்து தற்கொலைக்கு முன் மதன் பேசி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
மேலும் படிக்க | சாதி பெயரை கூறி அடித்து துன்புறுத்தல் - ஏக்கத்தோடு வந்த நின்ற பள்ளி மாணவர்கள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR