தமிழகம் மற்றும் புதுவையில் நவம்பர் 29, 30 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனது!
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 16 ஆம் தேதி தமிழகத்தின் வேதாரண்யத்தில் கரையை கடந்த கஜா புயல் பேரழிவை ஏற்படுத்திச் சென்ற நிலையில், அதைத்தொடர்ந்து காற்றதழுத்த தாழ்வு மற்றம் மேலடுக்கு சுழற்றி காரணமாகவும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. சில இடங்களில் கன மழையும், ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்த நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக மழையின்றி வெயில் அடித்து வருகிறது. இது மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வருகிற நவம்பர் 30 ஆம் தேதியும், டிசம்பர் 1 ஆம் தேதியும் தமிழக கடலோர பகுதி மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளிலும் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கஜா புயலுக்கு பிறகு தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.